SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதியவரை திருமணம் செய்து பணம்,நகை மோசடி : இளம்பெண் உள்பட 5 பேர் கைத

2013-02-10@ 13:32:23

திண்டுக்கல்:முதியவரை திருமணம் செய்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் நகைகளை அபகரித்துக் கொண்டு அவர் மீது பாலியல் புகார் கொடுத்த இளம்பெண் உள்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் நத்தம் ரோடு ஏபி நகரில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வருபவர் முகமதுசித்திக் (57). இவரது நிறுவனத்தில் கிழக்கு ஆரோக்கியமாதா தெரு அழகு நகரை சேர்ந்த விக்டோரியாராணி என்ற வகிதாராணி (29) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவரும், முகமதுசித்திக்கும் கடந்த 25.6.12ம் ஆண்டு இஸ்லாமிய முறைப்படி நாகூர் தர்காவில் திருமணம் செய்து கொண்டனர்.

முகமது சித்திக்கிடம் இருந்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு, நகைகள், ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை விக்டோரியா ராணி அபகரித்துக் கொண்டார். பின்னர் ஜனவரி 23ம் தேதி விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கிரி ராஜகணபதி (31) என்பவருடன் திண்டுக்கல் நாகல் நகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் விக்டோரியா ராணியின் தாய் மரியபுஷ்பம், அண்ணன் டேவிட், இரண்டாவது கணவர் கிரி ராஜகணபதி, உறவினர்கள் அமுதா, ராஜு, தெரஸ் என்ற குட்டைதெரஸ் உள்ளிட்ட 7 பேர் சேர்ந்து முகமது சித்திக்கிடம் மேலும் பல லட்சம் ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து திண்டுக்கல் மகளிர் காவல் நிலையம் மற்றும் எஸ்பியிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து ஜே.எம்.2 கோர்ட்டில் முகமது சித்திக் மனுத்தாக்கல் செய்தார். கோர்ட் உத்தரவின் பேரில் திண்டுக்கல் மகளிர் போலீசார் விக்டோரியா ராணி உள்பட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். தேடப்பட்டு வந்த நிலையில் விக்டோரியா ராணி முன்ஜாமீன் பெற திண்டுக்கல் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இதற்கிடையே, விக்டோரியா ராணி நேற்று முன்தினம் முகமதுசித்திக் மீது தன்னை குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் தெரிவித்தார். ஏற்கனவே தேடப்பட்டு வரும் நிலையில் குற்றவாளியிடம் இருந்து புகார் மனு எப்படி வாங்கலாம்? என அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அனார்கலியுடன் முகமது சித்திக் தரப்பு வக்கீல்கள் வாக்குவாதம் செய்தனர்.
ஆனால் இந்தப் புகாரின் பேரில் முகமது சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விக்டோரியா ராணி (29), மரியபுஷ்பம் (52), அமுதா (48), ராசு (45), தெரசு என்ற குட்டை தெரசு ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.

walgreens promo read free pharmacy discount cards
venlafaxine forum click venlafaxine 150
cialis cvs coupon cialis coupon cialis 20mg
how do abortion pill work pristineschool.com misoprostol abortion

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • salemchennairoad

  பொதுமக்கள் எதிர்ப்பு மீறி நடைபெறும் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் : விளை நிலங்கள் அழியும் அபாயம்!

 • icffactorychennai

  சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ஆய்வு

 • RaghulGandhi48thBday

  ராகுல் காந்தியின் 48வது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

 • IndonesiaTobaLake

  இந்தோனேஷிய ஏரியில் 80 பேரை ஏற்றி கொண்டு சென்ற படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, பலர் மாயம்

 • KiteWarPalestine

  பட்டத்தில் தீவைத்து இஸ்ரேல் மீது புதுவிதமாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்