SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸீப்ரோனிக்ஸ் அறிமுகப்படுத்தும் 2.0 புக்‌ஷெல்ஃப் ஒயர்லெஸ் ஸ்பீக்கர்-ஜைவ்

2018-05-08@ 17:06:10

ட்ரூ 2.0 ஒயர்லெஸ் ஸ்பீக்கர்கள், இடதுபுற மற்றும் வலதுபுற ஸ்பீக்கர்கள் ஒயர்லெஸ் கனெக்‌ஷன் மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.

● போர்டபிள் 2.0 ஒயர்லெஸ் ஸ்பீக்கர்

● டூயல் மோட்கள் – பேர்ட் மற்றும் இண்டிவிஜுவல்

● BT மற்றும் AUX இன்புட்

● வால்யூம் கண்ட்ரோல்

● பில்ட்-இன் ரீசார்ஜபிள் பேட்டரி

இரண்டு தனிப்பட்ட வயர்லெஸ் போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள் ஆனால் அவற்றை ஒன்றாக பேர் (pair) செய்து ஒரு 2.0 ஸ்பீக்கராக வேலை செய்யும் அற்புத அனுபவத்தை பெற முடியுமா என எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்திருந்தோம். இதோ, அவை அனைத்தையும் செய்யக்கூடிய உண்மையான ஒயர்லெஸ் தொழிற்நுட்பத்தின் ஆற்றலோடு வந்துள்ள, நம் சமீபத்திய 2.0 ஸ்பீக்கர் ‘ஜைவ்’ மூலம் அது இப்போது சாத்தியமாகின்றது.

ஐடி பெரிஃபரல்கள், சவுண்ட் சிஸ்டம்கள், மொபைல்/லைஃப்ஸ்டைல் அசெசரிஸ் மற்றும் சர்வைலன்ஸ் பொருட்கள் போன்றவற்றுக்கான இந்தியாவின் முன்னணி சப்ளையர்களான ஸீப்ரோனிக்ஸ், ஒரு இடதுபுற மற்றும் வலதுபுற ஒயர்லெஸ் இணைப்புடன் வரும் சமீபத்திய 2.0 ஒயர்லெஸ் புக்‌ஷெல்ஃப் ஸ்பீக்கர் ‘ஜைவ்’ மூலம் தன் பல வகையான சவுண்ட் சிஸ்டம்களில் புதிதாக ஒன்றை அறிவித்துள்ளது. இரண்டு ஸ்பீக்கர்களும் பில்ட்-இன் பேட்டரியுடன் வருகின்றது, இதனால் நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் முழுமையாக கம்பியிணைப்பு இல்லாமல் உங்கள் இசை மற்றும் திரைப்படங்களை கண்டுகளிக்க முடியும்.
 
ஜைவ் 2.0 ஸ்பீக்கர் இடதுபுற மற்றும் வலதுபுற ஸ்பீக்கர்களுக்கு இடையில் ஒயர்லெஸ் இணைப்பைக் கொண்டிருக்கிறது, இது பயனருக்கு ஒரு 2.0 ஸ்பீக்கரில் உள்ளது போல பேர்ட் மோடிலோ (paired mode) அல்லது இரண்டு தனிப்பட்ட போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள் போல ஒரு தனிப்பட்ட அமைப்பிலோ பயன்படுத்துவதை எளிதாக்குகின்றது. இது 5W+5W RMS அவுட்புட் வசதியைக் கொண்டுள்ளது, இதனால் இசையைக் கேட்கும் போது அல்லது திரைப்படங்களை பார்க்கும் போது, உங்களுக்கு ஒரு கூடுதலான அதிர்வை அளிக்க ஒரு சூப்பர் பாஸுடன் சேர்ந்து மிகச்சிறந்த சத்தத்தை வழங்குகின்றது. இது ஒரு AUX கேபிளுடனும் வருகின்றது, இது உங்கள் கணிப்பொறி, தொலைக்காட்சி, கேமிங் கன்சோல் போன்றவற்றுடன் இணைக்க விரும்பும் போது மிகவும் உபயோகமாக இருக்கின்றது.

இந்த புக்‌ஷெல்ஃப் ஸ்பீக்கர் ஒரு வேலைச் சூழலுக்கு ஏற்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது, இதனால் இடத்தை மிச்சப்படுத்துகின்றது மேலும் அழகு மற்றும் நுட்பத்துடன் சிறந்த செயல்பாட்டையும் அளிக்கின்றது. இது ஒரு நல்ல நேர்த்தியான பிளாக் மேட் ஃபினிஷைக் கொண்டுள்ளது மேலும் பின்புறம் ஒரு பிளே பட்டனுடன் வால்யூம் கண்ட்ரோல் பட்டன்களையும் கொண்டுள்ளது. ஸ்பீக்கர்கள் இணைக்கப்பட்டுள்ள மோடில் 2 வினாடிகளுக்கு ஸ்பீக்கர் மீதுள்ள பிளே பட்டனை அழுத்துவதன் மூலம் தனிப்பட்ட அமைப்பில் அல்லது இணைந்த (paired) அமைப்பில் இயக்க முடியும். பேர்ட் மோடில் (paired mode) நீங்கள் இரண்டு ஸ்பீக்கர்களுக்காகவும் ஸ்மார்ட்போன் போன்ற ஒரு சோர்ஸை பயன்படுத்தலாம், மேலும் ஸ்பீக்கர்களை ஒன்றிலிருந்து ஒன்று விலகியிருக்கும் வகையில் வைத்திருக்கலாம். அதேசமயம், தனிப்பட்ட மோடில் நீங்கள் ஸ்பீக்கர்களை தனிப்பட்ட ஒயர்லெஸ் ஸ்பீக்கராக பயன்படுத்தலாம். இது 8 மணி நேர பிளேபேக் நேரத்துடன் வருகின்றது, இதனால் நீங்கள் உங்கள் இசையை நீண்ட நேரத்திற்கு அனுபவிக்க முடியும்.

ஸீப்ரோனிக்ஸ் இந்தியாவின் இயக்குநர் திரு. பிரதீப் தோஷி அவர்கள் தொடங்கி வைக்கும் போது பேசியதாவது, 'எங்கள் சமீபத்திய 2.0 ஒயர்லெஸ் ஸ்பீக்கர் 'ஜைவ்' மூலம் வயர்லெஸ் சந்தையில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளோம், இது 2 தனிப்பட்ட போர்டபிள் ஸ்பீக்கர்களாக மாறும் திறனையும் கொண்டுள்ளது, அதனுடன் இதன் வடிவம் மற்றும் செயல்பாட்டை குறைபாடில்லாமல் ஒரு சௌகரியமான வேலைச்சூழலுக்கு ஏற்ற வகையில் மாற்றுகின்றது.'

உங்கள் சாதனத்துடன் எளிதில் இணைந்து உங்களை தடையில்லாத இசையை கேட்டு மகிழ அனுமதிக்கும் திறனுடன் மட்டுமில்லாமல் அதன் லேசான எடையுடனும் சேர்த்து ஒட்டுமொத்த அம்சங்களும் இதை ஒரு சிறந்த போர்ட்டபிள் ஸ்பீக்கராக ஆக்குகின்றன. கருப்பு நிறத்தில் கிடைக்கும், இந்த தயாரிப்பு இந்தியா முழுவதும் அனைத்து முன்னணி ரீடெய்ல் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mo

  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

 • 4l

  ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • c1

  ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

 • b

  இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

 • to1

  குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்