SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை-சேலம் இடையே பசுமை விரைவு சாலை நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு வலுக்கிறது

2018-05-06@ 04:22:11

சேலம்: தமிழகத்தில் எந்த மாவட்டத்திற்கும் இல்லாத வகையில் சென்னை-சேலம் இடையே பசுமை விரைவு சாலை அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தெரிவித்தார்.  இந்தியாவிலேயே 2வது பசுமை விரைவு சாலை, சென்னை-சேலம் இடையே அமைக்கப்படுகிறது.  இந்தியாவில், ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலம் மும்பை-புனே இடையே பசுமை விரைவுச்சாலை உள்ளது. சென்னை- சேலம் பசுமை விரைவு சாலை 10 ஆயிரம் கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. இச்சாலை சென்னை தாம்பரத்தில் தொடங்கி காஞ்சிபுரம் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, போளூர் ஆரணி, செங்கம் வழியாக தர்மபுரியில் மாவட்டத்தில் தீர்த்தமலை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வழியாக மஞ்சவாடி கணவாயை அடைந்து, சேலத்தில் அயோத்தியாப்பட்டணம் வழியாக வரகம்பாடி, எருமாபாளையம், நிலவாரப்பட்டி, ெகஜ்ஜல்நாயக்கன்பட்டி வழியாக சேலம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடந்து, சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரியானூர் 1008 சிவாலயம் கோயில் பகுதியில் நிறைவு பெறுகிறது. இதன் மூலம் சென்னை, சேலம் இடையே 60 கிலோமீட்டர் தொலைவு மிச்சமாகும். பயண நேரம் 6 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக குறையும். தற்போது சென்னை- சேலம் இடையே 340 கிலோமீட்டர் தூரம் உள்ளது. பசுமை விரைவு சாலை 274 கி.மீ. தூரமாக குறைகிறது.   

 இச்சாலை அமைக்க முதல் கட்டமாக சர்வே எடுக்கும் பணி  கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. சாலை அமைக்க தேவையான நிலம், எவ்வாறு சாலை அமைக்கலாம் என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சர்வே எடுத்து வருகின்றனர். இவ்வாறு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு பொதுமக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்பணிக்காக கையகப்படுத்தும் பெரும்பாலான நிலங்கள் விவசாய நிலமாகவும், வீடுகளில் அதிகளவில் உள்ளன. சாலைப்பணிக்காக நிலம் கையகப்படுத்தினால், தங்களின் வாழ்வாதாரமே பாதிக்கும் என்று விவசாயிகள் புலம்பி வருகின்றனர். சேலம் எருமாபாளையம், நிலவாரப்பட்டியில் விவசாயிகள், பொதுமக்கள் கடந்த சில நாட்களாக சாலை மறியல், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு இப்போதுதான் பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது. அதற்குள் விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் வலுத்துள்ளது.

இது குறித்து சேலத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:  இத்திட்டத்திற்கு கையகப்படுத்தும் நிலங்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பனைமரங்கள், 2 லட்சம் ெதன்னை மரங்கள், 500 வீடுகள், இன்னும் பல வகையான மரங்கள் உள்ளன. நாங்கள் மூன்று தலைமுறையாக விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களுக்கு வாழ்வாதாரமே இந்த நிலம் தான். அதையே பறித்து கொண்டால், எங்கள் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவோம்?.
மேலும், நிலம் கையகப்படுத்தும் பகுதியில், இன்றைய மார்க்கெட் விலையை விட, குறைந்த தொகை தான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சேலத்தில் இருந்து சென்னை செல்ல 3 வழிகள் உள்ளன. இவ்வளவு வசதிகள் இருக்கும்போது, எதற்கு 8 வழி பசுமை திட்டம். விவசாயிகளை பாதிக்கும் இத்திட்டம் எங்கள் பகுதிக்கு வேண்டாம். விவசாயிகள் பாதிக்காத வகையில், இத்திட்டத்தை செயல்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

 • hungary_policepadhuga11

  புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

 • ThaiSanctuaryPiano

  யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

 • largebudhastatue

  உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலைக்கு புத்துணர்வு தரும் வகையில் பராமரிப்பு பணிகள் துவக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்