SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரம்பை மண்ணை அள்ளுவதாக கண்மாயை அள்ளுகிறார்கள் : கொந்தளிக்கும் விவசாயிகள்

2018-04-27@ 11:59:20

கம்பம்: கம்பம் அருகே நாராயணதேவன்பட்டியில் விவசாயிகள் பெயரில் பாஸ் வாங்கி கரம்பை மண்ணை அள்ளுகிறேன் என்ற பெயரில் கண்மாயையே சூறையாடுகிறார்கள் என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். உத்தமபாளையம் தாலுகாவில் குளங்கள், கண்மாய்களை தூர்வாருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது நிலங்களைச் சீர்படுத்தவும், மண்பாண்டம் செய்பவர்கள் தங்களது தொழிலுக்காகவும் பக்கத்தில் உள்ள கண்மாய்கள், குளங்களில் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சின்னமனூர், கம்பம், கூடலூர் பகுதிகளில் உள்ள கண்மாய்களில் இதற்கான அனுமதியை வாங்கி கடந்த சில தினங்களாக மண் அள்ளும் பணி நடக்கிறது.

இதில் முறைகேடுகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, கம்பம் அருகே நாராயணதேவன்பட்டியில் உள்ள கேசவபுரம் கண்மாயில் விவசாயிகள் பெயரில் மணல் கொள்ளை நடக்கிறது. இங்கு கரம்பை மண் அள்ளுவதற்கு அனுமதி வாங்கி உள்ள கும்பல், பகலில் கரம்பையை அள்ளுகின்றனர். அப்படி அள்ளும் கரம்பை மண்ணை டிப்பர் லாரிகள் மூலம் தினந்தோறும் செங்கல் சூளைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். மேலும் கரம்பை மண் அள்ளும்போதே மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் மணல் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கின்றனர். இதனை இரவில் ஜேசிபி மூலம் சேகரித்து விற்பனை செய்யும் வேலையிலும் ஈடுபடுகின்றனர். விவசாயிகள் பெயரில் தூர் வாருகிறோம் என்ற பெயரில் ஒட்டு மொத்த மணலையும் கபளீகரம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

குறிப்பாக, கேசவபுரம் கண்மாயில் மணல் திட்டுக்கள் அதிகளவில் உள்ளன. இதனை குறிவைத்து பொதுமக்களுடன் தூர்வாருகிறோம் என்ற பெயரில் மணல் கொள்ளையர்கள் களமிறங்கி உள்ளனர். கடந்த சில நாட்களாக மணல் திட்டுக்களை கொள்ளையடித்த தடயங்களையும் ஜேசிபி மூலமாக அழித்து வருகின்றனர். தற்போது மணலுக்கு பெரும் தட்டுப்பாடு உள்ளதால் அதிக விலை கொடுத்து இதனை வாங்கி செல்கின்றனர். மறுபுறம் விவசாயத்திற்கு அள்ளுகிறோம் என கரம்பை மண்ணையும் சிண்டிகேட் அமைத்து கொள்ளையடித்து வருகின்றனர். எனவே, அரசு அனுமதி என்ற பெயரில் நடக்கும் இந்த மணல் கொள்ளையால் கேசவபுரம் கண்மாய் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்