SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரியில் அரசு பஸ்களில் மீண்டும் கட்டண உயர்வு : பயணிகள் கடும் அதிர்ச்சி

2018-04-27@ 11:55:25

நாகர்கோவில்:  பார்வதிபுரம் மேம்பால பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து, அரசு பஸ்களில் மீண்டும் கட்டணம் உயர்ந்துள்ளது.நாகர்கோவில் பார்வதிபுரத்தில் மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. இந்த பால பணியால் நாகர்கோவில்  திருவனந்தபுரம் மற்றும் திருவனந்தபுரம்  நாகர்கோவில் செல்லும் வாகன போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை, திருவனந்தபுரம் செல்ல வேண்டிய பஸ்கள் அனைத்தும் டெரிக் சந்திப்பு, ஆசாரிபள்ளம் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல் திருவனந்தபுரம், களியக்காவிளை, மார்த்தாண்டம், தக்கலை மார்க்கங்களில் இருந்து நாகர்கோவில் வர வேண்டிய பஸ்கள், கனரக வாகனங்கள் சுஷ்ருஷா மருத்துவமனை சந்திப்பில் இருந்து களியங்காடு சாலை, இறச்சக்குளம், புத்தேரி வழியாக நாகர்கோவிலுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

திருநெல்வேலிக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் இறச்சக்குளம் சந்திப்பில் இருந்து நேராக செண்பகராமன்புதூர் வழியாக ஆரல்வாய்மொழிக்கு செல்கின்றன. திருவனந்தபுரம் மற்றும் குமரி மேற்கு மாவட்டத்தில் நாகர்கோவிலுக்குள் வர வேண்டிய கார், இரு சக்கர வாகனங்கள் இறச்சக்குளத்தில் இருந்து ஆலம்பாறை வழியாக கட்டையன்விளை  இ.பி. ஆபீஸ் ரோடு வந்து நாகர்கோவிலுக்குள் வருகின்றன. இந்த போக்குவரத்து மாற்றத்தால் ஆலம்பாறை சானல் கரை ரோட்டில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் செல்ல வேண்டிய தனியார் பஸ்கள், லாரிகள் கூட ஆலம்பாறை சந்திப்பு வந்து விடுவதால் நெருக்கடி அதிகரிக்கிறது.

எனவே போக்குவரத்து போலீசார் முக்கிய சந்திப்புகளில் நின்று, திருவனந்தபுரம் செல்ல வேண்டிய  தனியார் பஸ்கள் மற்றும் லாரிகளை டெரிக் சந்திப்பு, ஆசாரிபள்ளம் வழியாக திருப்பி விட வேண்டும். அவ்வாறு திருப்பி விடும் பட்சத்தில், ஆலம்பாறை சானல் கரை ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாது.
இதற்கிடையே திருவனந்தபுரம்  நாகர்கோவில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, புறநகர் பஸ்களில் 3 முதல் 5 ரூபாய் வரையிலும், டவுன் பஸ்களில் 2 ம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு போக்குவரத்து கழகம் மீண்டும் கட்டணத்தை உயர்த்தி இருப்பது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, 6 கி.மீ. தூரம் அதிகம் சுற்ற வேண்டி உள்ளதால், கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக கூறினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2018

    18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்