SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒரே வாரத்தில் 25 காசு சரிவு : நாமக்கல் முட்டை விலை 335 காசுளாக நிர்ணயம்

2018-04-27@ 00:30:11

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 15 காசு குறைந்து, 335 காசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழுகூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், முட்டை விலையில் மேலும் 10 காசுகள் குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 335 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.தமிழகத்தில் கடும் வெப்பத்தால் முட்டை விற்பனை குறைந்துள்ளது. மற்ற மண்டலங்களிலும் பல்வேறு காரணங்களால் முட்டை விலை குறைந்துள்ளது. எனவே  நாமக்கல் மண்டலத்திலும் விலை குறைக்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.  நாமக்கல் மண்டலத்தில் ஒரே வாரத்தில் முட்டை விலையில் 25 காசு வரை குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை விபரம்(காசுகளில்):  ஐதராபாத் 285, விஜயவாடா 315, பர்வாலா 290, மும்பை 360, மைசூர் 354, பெங்களூரு 350, கொல்கத்தா 374, டெல்லி 310 காசுகள்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்