SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாலியல் புகாரில் சிக்கிய புதுச்சேரி கால்நடைத்துறை இயக்குநர் பத்மநாபனுக்கு தடை : கிரண்பேடி அதிரடி

2018-04-26@ 14:25:34

புதுச்சேரி: பாலியல் புகாரில் சிக்கியுள்ள புதுச்சேரி கால்நடைத்துறை இயக்குநர் பத்மநாபனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பத்மநாபன் பணிகள் மேற்கொள்ள தடை விதித்து புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். புதுவை கால்நடைத்துறை இயக்குநர் பத்மநாபன் மீது அத்துறையில் பணியாற்றும் சில பெண்கள் பாலியல் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் தரப்பில் எழுத்துப்பூர்வமாக கவர்னர் கிரண்பேடிக்கு புகார் மனு அளித்தனர்.

அதன்பேரில் டாக்டர் வித்யா ராம்குமார் தலைமையிலான குழுவினர் பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரித்து சாட்சியம் பெற்றனர். மொத்தம் 27 பெண்களிடமிருந்து உயர் அதிகாரிகள் மீது பாலியல் தொல்லை தொடர்பான புகார்களை அந்த பெண்கள் அளித்த நிலையில் அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.

முதற்கட்டமாக கால்நடைத்துறை இயக்குநர் பத்மநாபன், குழுவிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் நேற்று முன்தினம் குழு முன்பு நேரில் ஆஜராகவில்லை. முன்னதாக இந்த விசாரணைக்கு நீதிமன்றத்தை அணுகி அவர் தடை உத்தரவு பெற்றார். இந்நிலையில் கால்நடைத்துறை இயக்குநர் பத்மநாபனுக்கு தடை விதித்து ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-08-2018

    16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்