SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 3 தான் : இந்திய தேர்தல் ஆணையம் தகவல்

2018-04-26@ 13:04:19

புதுடெல்லி: தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் பதிவு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 154 கட்சிகள் தமிழகத்தில் இருப்பதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 56 தேசிய, மாநில கட்சிகள் உட்பட மொத்தம் 1,866 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 154 கட்சிகள் உள்ளன. அவற்றில் 3 கட்சிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தகவல் வெளியாகியுள்ளது. அவை அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே இடம் பெற்றுள்ளனர். மற்ற கட்சிகள் எல்லாம் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாதவையாகும்.

இந்த கட்சிகள் தேர்தலில் சொந்தமான சின்னத்துடன் போட்டியிட முடியாதவை. தேர்தல் ஆணைய குழுதேர்வு செய்துள்ள சின்னங்களில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து அந்த சின்னத்தில்தான் போட்டியிட முடியும். தற்போதைக்கு மொத்தம் 84 சின்னங்கள் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கான அந்தஸ்து பெற வேண்டுமானால், மாநில அளவில் அல்லது தேசிய அளவில் குறிப்பிட்ட சில அம்சங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இந்தக் கட்சிகள் பதிவு செய்திருந்தாலும், அங்கீகரிக்கப்படாதவை. இந்த கட்சிகள் தேர்தலில் சொந்தமான சின்னத்துடன் போட்டியிட முடியாது. தேர்தல் ஆணைய குழு தேர்வு செய்துள்ள சின்னங்களில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து அந்த சின்னத்தில்தான் போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HurricaneLesliePortugal

    போர்ச்சுக்கலை தாக்கிய 'லெஸ்லி' புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு!

  • IndiaStatueOfUnity

    இறுதிப் பணிகள் நிறைவடைந்து கம்பீரமாய் காட்சியளிக்கும் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை: புகைப்படங்கள்

  • HBDAbdulKalam87

    ஏவுகணை நாயகன், மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் 87-வது பிறந்தநாள் இன்று..!

  • BuildingCollapseShajahan

    உ.பி.யின் ஷாஜகான்பூரில் கட்டிடம் இடிந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலி

  • engenewedding

    வின்ட்சர் தேவாலயத்தில் இங்கிலாந்து இளவரசி யூஜென் - ஜேக் ப்ரூக்பேங் திருமணம் கோலாகலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்