SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கத்துவா சிறுமி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை தடுக்கவில்லை : உச்சநீதிமன்றத்தில் பார்கவுன்சில் விளக்கம்

2018-04-26@ 12:02:12

புதுடெல்லி: கத்துவா சிறுமி பாலியல் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பார்கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை ஜம்மு வழக்கறிஞர்களையும், போலீசாரையும் தடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் பார்கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் காஷ்மீரைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆசிபா 8 பேரால் கோவிலில் அடைத்துவைத்து பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக 3 போலீசார், ஒரு சிறுவன் உள்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் பார்கவுன்சில் சார்பாக கத்துவா சிறுமி பாலியல் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-03-2019

    20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • arjithcrpf

    சிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு

  • catyoga

    பூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்

  • lebanonwar

    லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

  • chesspune

    ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்