SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடைப்பயிற்சிக்கு சென்ற டிடிவி அணி பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

2018-04-26@ 01:18:18

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நேற்று காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமமுக பிரமுகர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டார். இதை  கண்டித்து அக்கட்சியினர் சாைல மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ராமநாதபுரம், கொத்தத்தெருவை சேர்ந்தவர் தவமுனியசாமி (44). அதிமுக முன்னாள் கவுன்சிலர். தற்போது டி.டி.வி.தினகரன் அமைப்பான அமமுகவில்  மாவட்ட வர்த்தக அணி செயலாளராக உள்ளார். இவர் நேற்று காலை 7 மணியளவில் மதுரை சாலையில் சிதம்பரம் பிள்ளை ஊருணி பகுதியில் உள்ள  பூங்காவில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அரிவாள் உள்ளிட்ட  ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள், அவரை சரமாரியாக வெட்டினர்.  இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இதை பார்த்த அப்பகுதியினர் பீதியில் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

படுகாயமடைந்தவரை சிலர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட் டு வருகிறது.  இதுகுறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தவமுனியசாமியை வெட்டிய நபர்களை கைது செய்யக்கோரி ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன், மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமையில்  அமமுக கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குற்றவாளிகளை கைது செய்வதாக போலீசார்  உறுதியளித்தபின் மறியல் கைவிடப்பட்டது.

‘அமைச்சரை அவதூறாக பேசுவாயா’
சிகிச்சையில் இருந்த தவமுனியசாமி கூறுகையில், ‘‘திருவாடானையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமமுக சார்பில் கூட்டம் நடந்தது. அப்போது  அமைச்சர் மணிகண்டனின் செயல்பாடுகளை விமர்சித்து பேசினேன். கூட்டம் முடிந்து ஒருவாரம் கழித்து எனது வீடு, மற்றொரு அமமுக நிர்வாகியான  கமல் வீட்டில் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதுதொடர்பாக ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு உள்ளது. காலையில் நான்  நடைப்பயிற்சிக்கு சென்றபோது, ‘‘அமைச்சரை பற்றி அவதூறாக பேசுவாயா’’ என்று கூறியபடியே சிலர் வெட்டினர்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்