SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

11வது முறையாக நடால் சாம்பியன்

2018-04-23@ 01:33:29

பாரிஸ்: பிரான்சில் நடைபெற்ற மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) 11வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.இறுதிப் போட்டியில் ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரியுடன் நேற்று மோதிய நடால் 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

இரண்டாவது செட்டிலும் அதிரடியாக விளையாடி நிஷிகோரியின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த நடால் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று கோப்பையை முத்தமிட்டார். மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் தொடரில் அவர் 11வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரட்டையர் பிரிவு பைனலில் அமெரிக்காவின் பாப் பிரையன் - மைக் பிரையன் சகோதரர்கள் 7-6 (7-5), 6-3 என்ற நேர் செட்களில் ஆஸ்திரியாவின் ஆலிவர் மாராச் - மேட் பாவிச் (குரோஷியா) ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்