SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்கள் அடங்கிய 1000 பக்கங்கள் ெகாண்ட மருத்துவ ஆவணங்கள்: சசிகலா வக்கீல்களிடம் ஒப்படைப்பு

2018-04-21@ 00:45:45

சென்னை: ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்கள் அடங்கிய ஆயிரம் பக்கங்கள் ெகாண்ட மருத்துவ ஆவணங்களின் நகலை சசிகலா வழக்கறிஞர்களிடம் நேற்று ஒப்படைத்தனர். ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து தமிழக அரசு சார்பில் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் சார்பில், 30க்கும் மேற்பட்டோரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி உள்ளார். அப்போலோ நிர்வாக இயக்குநர் பிரதாப்ரெட்டி மற்றும் டாக்டர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் அடங்கிய ஆவணங்களின் தொகுப்புகள் வழங்க வேண்டும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் விசாரணை ஆணையத்தில் கேட்டனர்.

அதன் அடிப்படையில், கடந்த 2016 செப்டம்பர் 22ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் அடங்கிய மருத்துவ ஆவணங்களை நேற்று சசிகலா தரப்பு வழக்கறிஞர்களிடம் வழங்கினர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட 30 தொகுப்புகள் வழங்கப்பட்டன. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அப்போலோ மருத்துவர்கள் மற்றும் டாக்டர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய இந்த ஆவணங்கள் முக்கியமானவை என்பதால் சகிகலா தரப்பு வழக்கறிஞர்கள் அதை ஏற்கனவே கேட்டிருந்தனர். அந்த ஆவணங்களின் அடிப்படையில்  அப்போலா மருத்துவமனை நிர்வாகம், டாக்டர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படும்.

ராமானுஜம் உள்பட 7 பேருக்கு சம்மன்
ஏப்ரல் 30ம் தேதி முன்னாள் டிஜிபி ராமானுஜம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் திரிபாதி, ஏடிஜிபி அமரேஷ் பூஜாரி, ஐஜி தாமரைக்கண்ணன், சசிகலா உதவியாளர் கார்த்திகேயன், ஜெயலலிதா கார் ஓட்டுனர்கள் கண்ணன், ஐயப்பன் உட்பட 7 ேபரிடம் சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்கிறார். இதற்காக, அவர்களுக்கு விசாரணை ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்