SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடகாவுக்கு நிதி ஒதுக்கியதில் மத்திய அரசு பாரபட்சம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

2018-04-20@ 21:53:08

புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா சதுர்வேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே கார் விபத்தில் தன்னை கொல்ல முயற்சி நடந்ததாக குற்றம்சாட்டினார். போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய அந்த லாரி பா.ஜ பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இதையடுத்து அனந்தகுமார் ஹெக்டே பத்திரிகையாளர் கூட்டத்தை ரத்து செய்தார். கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜ தலைவர் அமித்ஷாவின் முகத்தில் தோல்வி பயத்தை பார்க்க முடிகிறது. பசவண்ணர் சிலைக்கு அவர் மாலை அணிவித்தபோது, அந்த மாலை கீழே விழுந்துவிட்டது.

அமித்ஷாவை பசவண்ணர் நிராகரித்துவிட்டார் என்பதற்கான அடையாளமே இந்த நிகழ்வு ஆகும். கர்நாடகத்தில் தேர்தலை எதிர்கொள்ள பாஜவில் பெரிய தலைவர்கள் இல்லையா?. முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா மீது பா.ஜ நம்பிக்கை இல்லையா? எதற்காக அக்கட்சி வெளி மாநிலங்களில் இருந்து தலைவர்களை வரவழைத்து பேச வைக்கிறார்கள்? நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு கர்நாடகத்தில் இருந்து வெளிமாநிலத்தை சேர்ந்த ஒருவரை பா.ஜ எம்.பி.யாக தேர்ந்து எடுத்துள்ளது. கர்நாடகத்தில் கன்னடர்கள் யாரும் அந்த பதவிக்கு தகுதியானவர்கள் இல்லையா?.

கர்நாடகத்திற்கு மத்திய அரசு ஏராளமான நிதி உதவி வழங்கியதாக அமித்ஷா சில விவரங்களை கூறி இருக்கிறார்.  கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசு கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,435.95 கோடி வழங்கியது. ஆனால் பா.ஜனதா ஆளும் மாநிலங்களான மராட்டிய மாநிலத்திற்கு ரூ.8,195 கோடி, குஜராத்திற்கு ரூ.3,894 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.2,153 கோடி ஒதுக்கப்பட்டது. வறட்சி நிதி ஒதுக்கியதில் மத்திய அரசு கர்நாடகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியுள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaneerrr_kaari

  தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

 • gold_navaratchri11

  நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

 • balore_arrrres1

  சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

 • gasa_vanvali111

  காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

 • hondu_aaas1

  அதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்