SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண் பத்திரிகையாளர் குறித்த சர்ச்சை கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கோரிய எஸ்.வி.சேகர்!

2018-04-20@ 15:43:32

சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை கருத்துக்க்கு எஸ்.வி.சேகர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெண் பத்திரிகையாளர் ஒருவரது கன்னத்தில் ஆளுநர் தன் கையால் தட்டிக்கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, ஆளுநரும் அந்த செய்தியாளரிடம் தன் செய்கைக்கு மன்னிப்பு கோரினார். இந்த சம்பவத்தை அடுத்து, பாஜக நிர்வாகியும், நகைச்சுவை நடிகருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுப்படுத்தும் விதமாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுயிருந்தார். இதற்கு கண்டன குரல்கள் எழவே, உடனே அந்த பதிவை அவர் பேஸ்புக்கில் இருந்து நீக்கிவிட்டார்.

இதனையடுத்து, அனைத்து பத்திரிகை சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி ஒரு கடிதத்தை எஸ்.வி.சேகர் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், எனது நண்பர் எழுதிய ஒரு கருத்தை படிக்காமல் தவறுதலாக என் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு விட்டேன். சற்று நேரத்தில் என் நண்பர் அதில் உள்ள வாசகங்கள் தரக்குறைவாக இருப்பதாக சொன்னார். உடனடியாக அது நீக்கப்பட்டும் விட்டது. அதில் உள்ள கருத்துகள் குறிப்பாக பெண்களை தரக்குறைவாக சொல்லக்கூடிய எதையும் நான் ஆதரிக்கவில்லை. இந்த சம்பவத்தால் மனவருத்தம் ஏற்பட்டுள்ள அனைத்து பத்திரிகை சகோதரிகளுக்கும் என் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். அதே சமயம் நான் நீக்கிவிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இப்போதும் தொடர்ந்து போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு என் கண்டனத்தை பதிவு செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் பாதுகாப்பு நல சங்கம் மனு..

இந்நிலையில் எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல்துறை ஆணையரிடம் பத்திரிகையாளர் பாதுகாப்பு நல சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். எஸ்.வி.சேகர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கக் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Thiruvarurchariot

    உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்