SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்குத்தண்டனை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை

2018-04-20@ 15:06:16

டெல்லி: 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்க சட்டத்திருத்தம் செய்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பிரச்சினைகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் குரல்கள் வலுத்துள்ளன.

இந்நிலையில், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றபோது, மத்திய அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 12 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் பரிசீலனை நடைபெற்று வருகிறது. இதற்காக போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு மீதான விசாரணை ஏப்ரல் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்