SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீதிமன்ற கட்டணம் செலுத்த இ-ஸ்டாம்ப் முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிமுகம்

2018-04-20@ 12:34:50

சென்னை : இணையத்தின் மூலம் நீதிமன்ற கட்டணம் செலுத்துவதற்கான இ-ஸ்டாம்ப் முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்டாம்ப் பேப்பர் எனப்படும் முத்திரைத்தாள் மூலம் வழக்குகளுக்கான நீதிமன்ற கட்டணம் செலுத்தும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதற்கு மாற்றாக இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் நீதிமன்றக் கட்டணம் செலுத்தும் இ-ஸ்டாம்ப் எனப்படும் மின்னணு முத்திரைத்தாள் முறை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, இ-ஸ்டாம்ப் முறை மூலம் நீதிமன்ற கட்டணம் செலுத்துவது எளிமையாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய முதல்வர் பழனிசாமி, போலி முத்திரைத்தாள் பயன்பாட்டை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்துள்ளார். அடுத்த கட்டமாக அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் விரைவில் இ-ஸ்டாம்ப் கவுன்டர் திறக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மின்னணு முத்திரைத்தாள் முறையால், போலி முத்திரைத்தாள்களை ஒழிக்க முடியும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Thiruvarurchariot

    உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்