SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை

2018-04-20@ 00:23:09

சென்னை: காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த  சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆர்.கே. நகர் எம்எல்ஏவான தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றுமாறு ஆளுநரிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி அவர்களைத் தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து  தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை ஜனவரி 23ம் தேதியன்று குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. அதேபோல துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 10 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி மற்றும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வெற்றிவேல் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் தீர்ப்பை கடந்த மார்ச் 7ம் தேதியன்று குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில், 18 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி சென்னை பெரம்பூர் தொகுதியை சேர்ந்த தேவராஜன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகளும் 8 மாதங்களாக காலியாக உள்ளது. தொகுதியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பது சிரமமாக உள்ளது. இந்த நேரத்தில் 18 தொகுதிகளின் எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 83 நாட்களாகியும் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த 8 மாதங்களாக காலியாக உள்ள இந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த தொகுதிகளை காலியாக உள்ள தொகுதி என அறிவித்து 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

  • hondu_aaas1

    அதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்