SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கல்வித்துறையில் எந்த தவறும் நடைபெறவில்லை என நான் சொல்லவில்லை: ஆளுநர் பன்வாரிலால் ரோகித்

2018-04-17@ 18:20:20

சென்னை: பேராசிரியை நிர்மலாதேவி மீதான குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது தான் என்று ஒரு நபர் விசாரணை கமிஷன் குழுவை தாம் அமைத்துள்ளதாக ஆளுநர் தகவல் தெரிவித்துள்ளார். ஒரு வாரத்தில் விசாரணை முடிந்து அறிக்கை அளிப்பார் அதிகாரிகள் என்று  ஆளுநர் பன்வாரிலால் கூறியுள்ளார்.  யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வெண்டியதில்லை என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏப்ரல் 30-க்குள் விசாரணை முடிந்து அறிக்கையை அதிகாரிகள் அளிப்பார் என்று ஆளுநர் பன்வாரிலால் கூறியுள்ளார்.

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தற்போதைக்கு தேவையில்லை என்றும் தேவைப்பட்டால் அமைக்கப்படும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் கூறியுள்ளார். பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

நிர்மலாதேவி யாரென்றே எனக்கு தெரியாது:

நிர்மலாதேவி யாரென்றே எனக்கு தெரியாது; அவரை நான் பார்த்ததே இல்லை என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். பட்டமளிப்பு விழா மேடையில் செனட் உறுப்பினர்கள் பலர் இருப்பர் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். நிர்மலாதேவி ஆடியோவில் தாத்தா என்று கூறினார் எனவும் எனது பெயரை கூறவில்லை என்று பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார்.

ஒளிவுமறைவற்ற விசாரணை:

ஒளிவுமறைவற்ற விசாரணை நடைபெறும் என்றும் வேந்தர் மாநில அரசையோ, அமைச்சர்களையோ கலந்து முடிவெடுக்க அவசியம் இல்லை என்றும் ஆளுநர் கூறியுள்ளார். என் மீது சுமத்தப்படும் குற்றங்கள் அடிப்படை ஆதாரமற்றவை என ஆளுநர் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள கிராமங்களை தெரிந்து கொள்ளவே பயணம் செய்தேன் எனவும் நான் ஆய்வு செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். விசாரணை ஆணையர் சந்தானம் எந்த நிலைக்கும் சென்று விசாரணை நடத்தலாம் என்றும் அவருக்கு எந்த தடையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

காவிரி-மத்திய அரசிடன கோரிக்கை:

காவிரி பிரச்னை தொடர்பாக மத்திய அரசிடம் எடுத்து கூறியுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக இன்று கூட மத்திய அமைச்சர் கட்கரியிடம் பேசினேன் என ஆளுநர் புரோகித் கூறியுள்ளார். குடியரசு தலைவர், பிரதமர் முன்னிலையில் காவிரி பிரச்சனை பற்றி பேசினேன் என்று அவர் கூறியுள்ளார். தமிழக மக்களுக்கு சாதகமாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று ஆளுநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சூரப்பா நியமனம்:

தகுதிகளின் அடிப்படையில் அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்டார் ஆளுநர் கூறியுள்ளார். நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் என்றும் கல்வித்துறையில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். கல்வித்துறையில் எந்த தவறும் நடைபெறவில்லை என நான் சொல்லவில்லை என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். விசாரணை அதிகாரிகளுக்கு தேவைப்பட்டால் பெண்களை விசாரணைக்கு உதவ இணைத்துக் கொள்ளலாம் என்று ஆளுநர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்