SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வங்கிகளில் கடன்பெற்று தொழிலதிபர்கள் நாட்டை விட்டு ஓடும் விவகாரம்: ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நாடாளுமன்ற குழு நோட்டீஸ்

2018-04-17@ 17:52:43

டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் நேரில் ஆஜராக நாடாளுமன்ற குழு உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் கடன்பெற்ற தொழிலதிபர்கள், பின்னர் நாட்டை விட்டு ஓடும் நிலை தொடர்கதையாக வருவதாக நாடாளுமன்ற எம்பிக்கள் குழு வருத்தம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன, மோசடிகள் தொடராமல் இருக்க எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு எம்பிக்கள் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மே 17-ம் தேதி அவர் ஆஜராக வேண்டும் என அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,000 கோடி கடன்பெற்று வெளிநாட்டில் தலைமறைவாகிவிட்டார். விஜய் மல்லையா ஸ்டேட் பேங்க் இந்தியா வங்கியில் கடன் பெற்று லண்டனில் தலைமறைவாக உள்ளார். இது போன்று மேலும் நடைபெறாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க நாடாளுமன்ற எம்.பி.,க்கள் குழு வலியுறுத்தியுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CrocodilesIndonesia

    300 முதலைகளை ஒரே நேரத்தில் கொன்று குவித்த கிராம மக்கள்: இந்தோனேஷியாவில் பயங்கரம்

  • trumpputinmeet

    பின்லாந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையே முக்கிய பேச்சுவார்த்தை

  • obamakenya

    கென்யா சென்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு

  • 17-07-2018

    17-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்