SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலம் சுகனேஸ்வரர் கோவில் யானையை கருணை கொலை செய்ய பக்தர்கள் கடும் எதிர்ப்பு

2018-04-17@ 17:11:04

சேலம்: நோய்வாய்பட்ட சேலம் சுகனேஸ்வரர் கோவில் யானையை கருணை கொலை செய்ய சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி அளித்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சேலம் மாநகரில் அமைந்துள்ள சுகனேஸ்வரர் கோவில் யானையான ராஜேஸ்வரி என்ற பெண் யானைக்கு தற்பொழுது வயது 42 ஆகும். உடல் நலம் பாதிக்கப்பட்டநிலையில் தொடர் சிகிச்சை அளித்தும் பலனளிக்காத நிலையில் படுத்த படுக்கையாக இருக்கும் யானை ராஜேஸ்வரி உயிருக்கு போராடி வருகிறது.

இந்நிலையில் பொது நல மனு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் யானையை கருணை கொலை செய்ய அனுமதி அளித்துள்ளது. இதற்கு பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புத்துணர்வு பயிற்சி முகாமிற்காக யானையை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லாரியில் ஏற்றியபோது முரண்டுபிடித்த யானை லாரியிலிருந்து கீழே குதித்தது. இதனால் ஏற்கனவே முன் இடது கால் சற்று ஊனமாக இருந்து வந்த நிலையில் மேலும் காலில் அடிபட்டது. இதனால் யானைக்கு உடல்நிலை அடுத்தடுத்து பாதிக்கப்பட்டது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • cmathleticstale

    மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை தடகள போட்டி : அமைச்சர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார்

  • tiruchurpooram

    கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா : கோலாகலமாக நடந்தது

  • saintjordysayspain

    செயிண்ட் ஜோர்டி தினம் : ஸ்பெயினில் ஒருவருக்கொருவர் புத்தகங்கள், மலர்கள் பரிசளித்து கொண்டாட்டம்

  • bookfairchennai

    உலகப் புத்தக தினத்தையொட்டி சென்னை கன்னிமரா நூலகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சி நிறைவு

  • 26-04-2018

    26-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்