SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் நக்சல் ஊடுருவலை தடுக்க கேரள எல்லையில் போலீஸ் தீவிர சோதனை

2018-04-17@ 16:46:24

கோவை: கேரளாவில் இருந்து நக்சலைட் ஊடுருவலை தடுக்க எல்லையில் தீவிர சேதனைக்கு பிறகே தமிழகத்துக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கேரளாவின் பாலக்காடு, மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் நக்சலைட் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. மாவோயிஸ்ட் மற்றும் நக்சலைட் நடமாட்டம் இருக்க கூடிய மாவட்டங்கள் என்று புதிதாக ஒரு பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் 11 மாநிலங்களில், 90 மாவட்டங்களில் மாவோயிஸ்ட் மற்றும் நக்சலைட் நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள 3 மாவட்டங்களில் தற்போது நக்சல் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. இதனால் கோவை மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள பாலக்காடு, மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் இருந்து தமிழகத்துக்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. அதேபோல் கோவை, ஈரோடு, நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களில் நக்சல் தடுப்பு பாதுகாப்பு படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் தமிழக-கேரள வனப்பகுதிகளிலும் கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்