SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு விரைவில் சரி செய்யப்படும்: நிதியமைச்சர் அருண் ஜெட்லி

2018-04-17@ 16:17:28

டெல்லி: வடமாநிலங்களில் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். டெல்லி, வாரணாசி, போபால் , ஐதராபாத் நகரங்களில் ஏடிஎம்களில் பணம் இல்லை. குஜராத், பீகார் மாநிலங்களிலும் வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லாததால் மக்களிடையே பதற்றம் நிலவி வருகிறது. மேலும் தெலுங்கானா, உ.பி., டில்லி, மத்திய பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏடிஎம்களில் பணம் இல்லாமல் மூடப்பட்டுள்ளன. இதனால், பணம் எடுக்க முடியாமல் அவதிப்படுவதாக மக்கள் புகார் கூறியுள்ளனர். ரிசர்வ் வங்கி போதிய அளவுக்கு 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்காததால், வங்கிகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலர், தாமஸ் பிராங்கோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு தற்காலிகமானது எனவும், இந்த பிரச்னை விரைவில் சரி செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். பணத்தட்டுப்பாடு தொடர்பாக தற்போதைய சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. போதிய அளவில் பணம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. வங்கிகளிடம் கையிருப்பில் உள்ளது. திடீரென மற்றும் வழக்கத்திற்கு மாறான பணதேவை காரணமாக தற்காலிகமான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

ராகுல் குற்றச்சாட்டு:

வங்கி ஏ.டி.எம்.களில் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாட்டுக்கு மோடி மீது ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். வங்கி கட்டமைப்பை பிரதமர் மோடி அழித்துவிட்டதாக ராகுல் கூறியுள்ளார். ரூ.30,000 கோடியுடன் நிரவ் மோடி தப்பி ஓடிவிட்டது பற்றி பிரதமர் ஒருவார்த்தை கூட பேசவில்லை. மேலும் மக்களிடமிருந்து 500, 1000 ரூபாய் நோட்டுகளை பறித்து வரிசையில் பிரதமர் மோடி நிற்க வைத்தார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பணம் கிடைக்க நடவடிக்கை:
ஏடிஎம்-களில் பணம் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பொருளாதார விவகாரத்துறை தெரிவித்துள்ளது. கோளாறுகள் சரிசெய்யப்பட்டு ஏடிஎம்-கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. மக்களின் தேவைக்கு ஏற்ப பணம் போதுமான அளவில் மத்திய அரசிடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்