SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் என்சைம் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும் : விஞ்ஞானிகள் தகவல்

2018-04-17@ 15:54:48

வாஷிங்டன்: பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் இண்டோனெல்லா சகைஎன்சிஸ் என்சைம்களை (பிளாஸ்டிக் உண்ணும் என்சைம்) பிளாஸ்டிக் மறுசுழற்சி முறையில் பயன்படுத்த இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவு சுற்றுசூழல் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 8 மில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பொருட்கள் கடல்களை சென்றடைகின்றன. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன். மீன்களின் வயிற்றிற்குள் பிளாஸ்டிக் செல்வதால் அவை இறக்கின்றன. இதனை தடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வந்த போதிலும் பிளாஸ்டிக்கை முழுமையாக அளிக்க முடியவில்லை.

இந்நிலையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சில ஆண்டுகளுக்கு முன் புதிய பாக்டீரியா ஒன்றை கண்டுபிடித்தனர். இண்டோனெல்லா சகைஎன்சிஸ் என்ற இந்த பாக்டீரியா பிளாஸ்டிக் செய்ய பயன்படுத்தப்பட்ட பாலிஎத்திலீன் டெராபைத்லேட்டை அழிக்கும் திறன் கொண்டது. இந்த என்சைம்களை பிளாஸ்டிக் மறுசுழற்சியில் பயன்படுத்த உள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளார்கள் தெரிவித்து உள்ளனர். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்படும். என்சைம்களில் மேலும் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட உள்ளன. அதன் முடிவில் பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலுமாக அழிப்பதற்காக வழியை கண்டுபிடிக்க முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • teacher_strike123

    சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!

  • indo_fire_dead

    இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி

  • hawai_volcano123

    ஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு!

  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

  • accidentkushinagar

    உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்