SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்து கோயில்களுக்கு மானிய விலையில் சாமி சிலைகளை வழங்கும் திருப்பதி தேவஸ்தானம்!

2018-04-17@ 15:04:51

ஐதராபாத்: திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இந்து கோயில்களுக்கு மானிய விலையில் சாமி சிலைகள், திருக்குடைகள் வழங்கப்படுகின்றன. திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்து தர்மத்தை பரப்ப பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையொட்டி இந்து கோயில்களை கட்டுவோருக்கு மானிய விலையில் சாமி கற்சிலைகள், பஞ்சலோக சிலைகள், திருக்குடைகள் உள்ளிட்டவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கி வருகிறது. இதனை பெற விரும்புவோர் திருப்பதி தேவஸ்தான தலைமை அலுவலகத்துக்கு விண்ணப்பம் அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல் மற்றும் பஞ்சலோக சாமி சிலைகளின் விலை, அவற்றின் உயரம், எடையை பொருத்து மாறுப்படும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு கற்சிலைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர பிரிவினருக்கு 75% மனிய விலையில் கற்சிலைகள் வழங்கப்பட்டு வருகிறது. பஞ்சலோக சிலைகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு 90% மனிய விலையிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர பிரிவினருக்கு 75% மனிய விலையிலும் விற்கப்படுகிறது. இதேபோல் இந்து கோயில்களுக்கு தேவைப்படும் மைக்செட், திருக்குடைகள் உள்ளிட்டவையும் மானிய விலையில் பெறலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்