SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கன்னியாகுமாரியில் பழங்குடியின மக்களின் பயன்பாட்டிற்காக விடப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தம்

2018-04-17@ 14:48:26

கன்னியாகுமாரி: கன்னியாகுமாரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகன சேவை எவ்வித முன்அறிவிப்பும் இல்லாமல் நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  கன்னியாகுமாரி மாவட்டத்தில் பத்துக்காணி,ஆருக்காணி,ஆலஞ்சேலை,பேச்சிப்பாரை, கோதைஆறு ஆகிய மலைவாழ் கிராமங்கள் உள்ளது. இந்த கிரமங்களில் வசிக்கும் மக்களின் பயன்பாட்டிற்காக கடந்த ஆண்டு இறுதியில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.

ஆனால் இந்த ஆம்புலன்ஸ் ஆனது இரண்டு வாரங்கள் மட்டுமே இயக்கப்பட்டதாகவும். கடந்த 3 மாதங்களாக குலசேகரம் காவல் நிலையத்தில் பயன்படுத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை வேறு மாவட்டத்திற்கு மாற்றவும் அதிகாரிகள் முற்சிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். எனவே 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு விட பழங்குடியின மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • teacher_strike123

    சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!

  • indo_fire_dead

    இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி

  • hawai_volcano123

    ஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு!

  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

  • accidentkushinagar

    உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்