நதிநீர் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வருகிறது தேசிய அளவில் ஒரே நடுவர் மன்றம் : மத்திய அமைச்சர் தகவல்

2018-04-17@ 14:40:54

டெல்லி : நாடு முழுவதும் நிலவக்கூடிய நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல்வேறு நடுவர்மன்றங்களுக்கு பதிலாக தேசிய அளவில் ஒரே நடுவர் மன்றம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் தகவல் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நேற்று மத்திய நீர் வளத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையில் 5 மாநிலங்களின் நீர் ஆதாரத் துறை அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் தேசிய அளவில் அமையவிருக்கிற நடுவர் மன்றம் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதோடு நீர் பாசன வசதிகளையும் ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
காவிரி, நர்மதை, கிருஷ்ணா உள்ளிட்ட பல்வேறு நதிகளுக்கு நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டு வருவதற்கு பதிலாக ஒரே ஒரு நதிநீர் நடுவர் மன்றம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இதற்காக மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் தேசிய அளவிலான நடுவர் மன்றம் செயல்பாட்டிற்கு வரும்போது அதன் தீர்ப்பை இறுதியானதாக இருக்கும் என்றும் அதனை மாநில அரசுகள் கட்டாயம் அமல்படுத்தி ஆக வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தேசத்தின் பாதுகாப்பிற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
காதலி ஏமாற்றியதால் விரக்தி திருமணத்துக்காக திருடிய ரூ.5 லட்சத்துக்கு காதலன் தீ
மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பேன் அரசியலுக்கு நான் வரமாட்டேன்: பிரகாஷ்ராஜ் பேட்டி
சிறுமிகள் பலாத்கார குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவர பரிசீலனை: உச்ச நீதிமன்றத்தில் அரசு தகவல்
குஜராத் கலவரத்தில் ஒரே இடத்தில் 97 பேர் கொலை பாஜ முன்னாள் அமைச்சர் விடுதலை: அகமதாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு
பெங்களூர் சிறையில் பரபரப்பு : சசிகலா அறையில் நள்ளிரவில் போலீசார் அதிரடி சோதனை : கைதிகளிடம் 11 செல்போன் பறிமுதல்
மத்திய நிதிபுலனாய்வு அறிக்கையில் அதிர்ச்சி பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கள்ளநோட்டுகள் அதிகரிப்பு
21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!
மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா
இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!
10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்
LatestNews
பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் பலி
08:44
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திருப்பினார் பிரதமர் மோடி
08:34
உத்தரப்பிரதேசத்தில் ஐபிஎல் போட்டி சூதாட்டம் : 3 பேர் கைது
08:21
பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு : எஸ்.வி.சேகரை கைது செய்ய போலீஸ் தயக்கம்
08:10
மதுரை ஆயிரங்கால் மண்டபம் மீண்டும் திறப்பு
07:47
அணுஆயுத சோதனை நிறுத்தம் : வடகொரியா அதிபர் அறிவிப்புக்கு டிரம்ப் வரவேற்பு
07:43