SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

72 மணி நேரத்தில் 5,000 முறை வானில் பறந்து இந்திய போர் விமானங்கள் சாதனை

2018-04-17@ 14:39:57

டெல்லி: பாகிஸ்தான் எல்லையை ஒட்டியப் பகுதியில் போர்ப்பயிற்சியில் ஈடுபட்ட இந்திய விமானப்படை விமானங்கள், 72 மணி நேரத்தில் 5 ஆயிரம் முறை வானில் பறந்து சாதனை படைத்துள்ளன. சீனா மற்றும் பாகிஸ்தானை ஒட்டியுள்ள இந்திய எல்லைகளில், இந்திய விமானப்படையும், ரஷ்யப் படையும் இணைந்து, ககன்சக்தி என்ற போர் விமான பயிற்சியை கடந்த 10-ம் தேதி தொடங்கின. 23-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் முதற்கட்டமாக, பாகிஸ்தான் எல்லையை ஒட்டி, பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த இரண்டு வார காலப் பயிற்சி, இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவு உள்ளிட்ட அனைத்து விமானங்களும் பங்கேற்க உள்ளன என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல், ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து அழிக்கும் ஏவுகணைகள், ரேடார் மற்றும் கண்காணிப்பு கருவிகளும் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இரவும் பகலுமாக நடைபெறும் இந்தப் பயிற்சியின் நோக்கம் விமானப் படையின் போர் தொடுக்கும் திறனைச் சோதிப்பதாகும். இந்நிலையில், 3 நாட்களில் 5 ஆயிரம் முறை, இந்திய விமானப்படை விமானங்கள், வானில் பறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2018

    24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • swati_hunger_strike

    போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

  • volvo_boat_comp

    பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

  • wildanimals_docto11

    காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

  • teachers_protest11

    டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்