SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உ.பி.யில் மேலும் ஒரு சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம் : 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை

2018-04-17@ 14:03:03

லக்னோ :காஷ்மீர் சிறுமிக்கு நேரிட்ட கொடுமையின் பாதிப்பில் இருந்து நாடு மீள்வதற்குள் உத்தர பிரதேசத்திலும் அது போன்றதொரு கொடூரம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் எட்டா என்னும் இடத்தில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுகிழமை கல்லா மண்டி என்னும் இடத்தில திருமண நிகழ்ச்சிக்கு சென்ற சிறுமி காணாமல் போனார்.

காவல்துறையினர் தேடி வந்த நிலையில், நேற்று இரவு சிறுமி பிணமாக மீட்கப்பட்டார். சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தேடி வரும் நிலையில், சிறுமி கொலை தொடர்பாக சோனு என்பவனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தின் உன்னாவை தொடர்ந்து தற்போது எட்டாஹ்வில் சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமை நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.தண்டனைகள் கடுமையாக இல்லாததை சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருவது என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாகும்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்