SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தெருவோரம் இளைஞர்களுடன் கிரிக்கெட் ஆடி மகிழ்ந்த சச்சின்..!

2018-04-17@ 13:59:30

மும்பை: மும்பையில் தெருவோரம் இளைஞர்களோடு இளைஞராக கிரிக்கெட் ஆடி மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டுள்ளார் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இந்தியா முழுவதும் ஆண்டு தேர்வுகள் முடிவடைந்துள்ளதால் கோடை விடுமுறை களைக்கட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் மும்பையில் ஐ.பி.எல். போட்டிகள் முடிவடைந்ததும் தெருவோரம் கிரிக்கொட் ஆடிய இளைஞர்களோடு சச்சினும் கிரிக்கெட் ஆடி மகிழ்ந்துள்ளார்.

சமீபத்தில் சச்சின் மும்பையில் காரில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை கண்டுள்ளார். உடனே காரிலிருந்து இறங்கி வந்து அவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார். அந்த வீடியோவை சச்சினின் பள்ளி நண்பரும் கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இறுதியாக சச்சினுடன் விளையாடிய இளைஞர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சச்சினின் ஆட்டத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்த ரசிகர்கள் பலரும் வினோத் காம்ப்ளிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்