SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோயம்பேடு பூ வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

2018-04-17@ 12:42:24

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோயம்பேட்டில் பூ வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டதில் ஈடுப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் காவிரி வாரியம் அமைக்க கோரி பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக ரயில் மறியல், சாலை மறியல், விமான நிலைய முற்றுகை என பல்வேறு போராட்டங்களை நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள மலர் மாலை வியாபாரிகள் இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தொடர்ந்து இழுப்பறி நடத்தி வருவதாகவும், விவசாயிகளின் உணர்வுகளை மதிக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கோயம்பேட்டில் உள்ள 150 மலர் மாலை கடைகளையும் அடைத்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் கோயம்பேட்டில் உள்ள அனைத்து கடைகளும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் 1,500க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்