அமெரிக்க நிறுவனம் வழங்கும் விருதுக்கு தமிழக அரசுப் பள்ளி மாணவி தேர்வு

2018-04-17@ 12:24:11

திருவாரூர் : அமெரிக்க நிறுவனம் வழங்கும் விருதுக்கு தமிழக அரசுப் பள்ளி மாணவி தேர்வாகி உள்ளார். திருவாரூர் மாவட்டம் காலாட்சேரி மேற்கு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருபவர் பானுப்ரியா. அமெரிக்கா நிறுவனம் நடத்திய சமூதாய பங்களிப்பு குறித்த போட்டியில் பங்கேற்றார். மாதவிடாயும் மூடதனமும் என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரையை அவர் சமர்ப்பித்தார். நாடு முழுவதும் இருந்து, 4,400 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு, குறிப்பிட்ட தலைப்பில், கட்டுரை மற்றும் நேர்முக போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதி போட்டி, டெல்லியில் நடந்தது.
திருவாரூரைச் சேர்ந்த, அரசு பள்ளி மாணவி, பானுபிரியா வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றார். டெல்லியில் நடந்த விழாவில், 'பேட்மின்டன்' வீராங்கனை, சாய்னா நேவால், பரிசு வழங்கினார். இந்த போட்டியில், டெல்லி மாணவி, இஷிதா மங்க்ளாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இவ்விருவரும் இம்மாதம் 26ம் தேதி வாஷிங்டனில் நடக்கும் விருது வழங்கும் விழாவில் மாணவி பானுப்ரியா பங்கேற்க உள்ளார்.
வரும் 24ம் தேதி அமெரிக்காவுக்கு செல்ல வேண்டிய மாணவி பானுப்ரியாவுக்கு இன்னும் விசா கிடைக்கவில்லை. இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவை மாணவி பானுப்ரியாவும், அவரது ஆசிரியரும் சந்தித்து விசா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகள்
வேலூர் சத்துவாச்சாரியில் மாடு விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
அருணாசலபிரதேசத்தில் வாகன விபத்தில் பலியான நெல்லை ராணுவவீரர் உடல் 21 குண்டுகள் முழங்க தகனம்
தூத்துக்குடி அருகே நாயக்கர் கால சதி கல் கண்டெடுப்பு
பென்னாகரம் அருகே பலத்த சூறைக்காற்றுக்கு வாழை மரங்கள் சேதம்
நிர்மலாதேவி விவகாரத்தில் பேராசிரியர் முருகனிடம் 2வது நாளாக விசாரணை : கருப்பசாமியை காவலில் எடுக்க திட்டம்
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் 5 நாள் விசாரணை முடிந்து நிர்மலாதேவி சிறையிலடைப்பு
மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை தடகள போட்டி : அமைச்சர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார்
கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா : கோலாகலமாக நடந்தது
செயிண்ட் ஜோர்டி தினம் : ஸ்பெயினில் ஒருவருக்கொருவர் புத்தகங்கள், மலர்கள் பரிசளித்து கொண்டாட்டம்
உலகப் புத்தக தினத்தையொட்டி சென்னை கன்னிமரா நூலகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சி நிறைவு
26-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
LatestNews
இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜி.கே.வாசன் நேரில் ஆதரவு
11:07
குட்கா முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
11:00
தேர்வு ஆணையத்தால் தேர்வான 242 உதவி மருத்துவர்களுக்கு முதல்வர் பணி ஆணை வழங்கினார்
10:55
அண்ணாநகரில் லாரி மீது கார் மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு
10:54
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மணப்பாறையில் ஆயிரம் பேர் பேரணி
10:49
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண்ணிடம் இருந்து 40 கிலோ கஞ்சா பறிமுதல்
10:43