SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குளோனிங் முறையில் மம்முத் யானைகளை மீண்டும் உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி

2018-04-17@ 11:47:38

வாஷிங்டன்: ஆர்க்டிக் பிரதேசத்தில் வாழ்ந்த மம்முத் எனப்படும் சடை யானைகளை மீண்டும் உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். மம்மூத் எனப்படும் நீண்ட ரோமங்களுடனும், மிகப்பெரிய வளைந்த தந்தங்களுடனும் கம்பீரமான யானைகள் பனியுக காலத்தில் ஐரோப்பிய கண்டத்தில் வாழ்ந்தன. 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அதிகமான அளவில் வாழ்ந்த இந்தவகை மம்மூத்துகள் மனிதர்களால் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டன என்று நம்பப்பட்டு வருகின்றன.

10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன சடை யானைகளின் ஏராளமான படிமங்கள் ஆர்க்டிக் பகுதியில் கிடைத்துள்ளதால் அதிலிருக்கும் டிஎன்ஏக்களை எடுத்து குளோனிங் முறையில் மறு உருவாக்கம் செய்ய அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். தற்போது கிடைத்துள்ள படிமங்களில் 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சடை யானை குட்டியின் உறைந்து போன டிஎன்ஏக்களை இதற்காக பயன்படுத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். இம்முயற்சியில் வெற்றி ஏற்படுமானால் ஜூராஸிக் பார்க் திரைப்படம் போன்று காலத்தால் அழிந்த உயிரினங்கள் மீண்டும் நடமாடும் நிலை ஏற்படலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CrocodilesIndonesia

    300 முதலைகளை ஒரே நேரத்தில் கொன்று குவித்த கிராம மக்கள்: இந்தோனேஷியாவில் பயங்கரம்

  • trumpputinmeet

    பின்லாந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையே முக்கிய பேச்சுவார்த்தை

  • obamakenya

    கென்யா சென்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு

  • 17-07-2018

    17-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்