SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

வெளிநாட்டு உளவாளிகள் பற்றி, தகவல் தெரிவிக்க புதிய இணையதளம் : சீன அரசு வெளியீடு

2018-04-17@ 10:15:30

பெய்ஜிங் : நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்கள் பற்றி, பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் இணையதளம் ஒன்றை சீன அரசு தொடங்கியுள்ளது. சீனாவின் தேசிய பாதுகாப்பு கல்வி தினம் அன்று www.12339.gov.cn என்ற இணைய தளத்தை அந்நாட்டு தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கியுள்ளது.

அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சிப்பவர்கள், ஆயுதக் கிளர்ச்சிக்கு தூண்டுபவர்கள், அந்நிய உளவாளிகள் பற்றி தகவல் தெரிவிக்கலாம் என அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் விளைவிப்பவர்கள் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு அரசு மூலம் வெகுமதி அளிக்கப்படும் என்றும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை பயன்படுத்தி தவறான தகவல் அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்