SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகம் பலவிதம்

2018-04-17@ 09:45:53

மியான்மரில் புத்தாண்டு உற்சாகம்:

மியான்மர் நாட்டின் மரபுப்படி வரும் 17ம் தேதி புத்தாண்டு பிறக்கிறது. புதிய ஆண்டை வரவேற்கும்வகையில் நாடு முழுவதும் வண்ணமயமான கொண்டாட்டங்கள் அரங்கேறி வருகின்றன. மாண்டலே நகரில் புத்தாண்டு துவக்க விழாவில் பாரம்பரிய நடனமாடும் பெண்கள்.

நீரூற்றும் புத்தாண்டு:


தாய்லாந்து நாட்டின் ‘சாங்க்ரான்’ எனப்படும் புத்தாண்டு கடந்த 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புத்தாண்டையொட்டி, யானைகள் தண்ணீரை பீயச்சி அடிக்கும் திருவிழா நடத்தப்பட்டது. இதில், மக்கள் யானைகள் மீது தண்ணீரை ஊற்ற, அவற்றை உறிஞ்சி யானைகள் திருப்பி தண்ணீரை பீயச்சி அடிக்கின்றன. இதன் மூலம் புதிய ஆண்டில் நல்ல மழை பெய்யும் என தாய்லாந்து மக்கள் நம்புகின்றனர்.

போலி மதுபாட்டில்கள் அழிப்பு:


இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில், போலீசார் கைப்பற்றிய போலி மதுபாட்டில்களை புல்டோசர் மூலமாக உடைத்து அப்புறப்படுத்துகின்றனர். அங்கு போலி மது வகைகளால் கடந்த மாதம் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

கோர மண் சரிவு:


ஜப்பானின் ஒய்டா மலைப் பிரதேசத்தின் நகாட்சு பகுதியில் ஏற்பட்ட கடும் மண் சரிவு காரணமாக வீடுகள் மண்ணில் புதைந்தன. மண் சரிவால் போக்குவரத்தும் முடங்கியது. கோரமான மண் சரிவு ஏற்பட்ட பகுதி.

தீப்பிடிக்கும் செல்பி:


அமெரிக்காவின் நியூயார்க்கில் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான 50 மாடி டிரம்ப் டவர் கட்டிடத்தில் சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன. பரபரப்பான அந்த சம்பவத்தின் போது, கட்டிடத்துடன் சேர்த்து செல்பி எடுத்துக் கொள்கிறார் பெண் ஒருவர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CrocodilesIndonesia

    300 முதலைகளை ஒரே நேரத்தில் கொன்று குவித்த கிராம மக்கள்: இந்தோனேஷியாவில் பயங்கரம்

  • trumpputinmeet

    பின்லாந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையே முக்கிய பேச்சுவார்த்தை

  • obamakenya

    கென்யா சென்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு

  • 17-07-2018

    17-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்