SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதுகுவலியை குறைக்கும் சாமை

2018-04-17@ 09:44:51

சிறுதானியங்கள் ஊட்டச்சத்து குறைவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் வராமல் தடுக்கின்றன. பெண்களுக்கு பித்தப்பையில் கற்கள் வருவது தடுக்கப்படுகின்றன. அதிக அளவு நார்சத்து மிகுந்த சிறுதானியங்கள் புற்றுநோய் வராமல் தடுக்கின்றன. உடல் பருமன் கொண்டவர்கள் சிறுதானியங்களை பயன்படுத்தும்போது உடல் எடை சீராக குறைகிறது. பைட்டோகெமிக்கல்ஸ் மற்றும் பைட்டிங் அமிலம் சிறுதானியங்களில் காணப்படுவதால் பல்வேறு நோய்கள் வருவதை தடுக்கும் சக்தி இதற்கு உண்டு. எனவே சிறுதானியங்களை அன்றாடம் உணவுகளில் சேர்க்கும் பழக்கத்தை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். இனி ஒவ்வொன்றின் சிறப்பு குறித்து தனித்தனியாகப் பார்ப்போம்..

கம்பு:

மற்ற தானியங்களை விட கம்பில் அதிக புரதச்சத்து மட்டுமில்லாது அமினோ அமிலங்களையும், அதிகம்பெற்று தரம் வாய்ந்ததாக விளங்குகிறது. மாவுச்சத்து, ருசியைக் கொடுக்கக்கூடிய கொழுப்பு, வைட்டமின், தாதுஉப்பு, ரத்த அபிவிருத்திக்கான இரும்புச்சத்து மற்ற தானியங்களை விட இதில் அதிக அளவும் உள்ளது.

சாமை:

உடல் அசதி மற்றும் தளர்ச்சியை போக்கி சுறுசுறுப்பை தரும். எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட முதுகெலும்பு பலப்படும். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் அடிக்கடி பயணம் செய்வதால் ஏற்படும் முதுகுவலி குறையும்.

வரகு:

இதில் லெசித்தின் அதிகளவு உள்ளது. நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு மிகவும் இது உதவுகிறது. ‘‘பி’’ வைட்டமின், நியாசின், போலிக்அமிலம், தாதுஉப்புகள், கால்சியம், இரும்புச்சத்து போன்றவையும் அடங்கியுள்ளன. வரகு உடல் பருமன் உள்ளவர்களுக்கு சிறந்த உணவாகும். எடைகுறைப்பிற்கும், பருமனால் ஏற்படும் மனஅழுத்தத்திற்கும் நல்லதொரு தீர்வாக இந்த வரகு உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்