SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

2018-04-17@ 07:56:04

புதுடெல்லி : கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தங்கப்பதக்கத்துடன் திரும்பிய சுஷிஸ்குமார், மேரிகாம், மணிகா பத்ராவுக்கு டெல்லியில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோரை ஜதராபாத்தில் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட நகரில்  நடைபெற்ற 21வது காமன்வெல்த் போட்டியில் பதக்க வேட்டையில் ஈடுபட்ட இந்திய அணி 26 தங்கங்களுடன் பட்டியலில் 3வது இடத்தை பிடித்தது. இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் சவுரவ் கோஷல் மற்றும் ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவும் விமானம் மூலம் சென்னை வந்தனர்.

இதே போல் ஸ்குவாஷ் மகளிர் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தீபிகா பல்லிக்கள் சென்னை வந்தார். இவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜோஷ்னா சின்னப்பா, ஒலிம்பிக்கில் ஸ்குவாஷ் போட்டி இல்லாதது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்