SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பயங்கர ஆயுதங்களுடன் 6 கொள்ளையர்கள் கைது

2018-04-17@ 05:56:58

சென்னை: மதுரவாயல், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனியாக நடந்து செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க கோயம்பேடு உதவி கமிஷ்னர் ஜான்சுந்தர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக போலீசார் தேடி வந்தனர். வழிப்பறி நடைபெற்ற பகுதியில் சிசிடிவி கேமராக்களையும்கண்காணித்து வந்தனர். அதில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த நபர்கள் குறித்து விசாரணை செய்து வந்தனர். இது தொடர்பாக மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி கவாஸ்கர் (என்ற) குரு(32), என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது செல்போன் எண்ணை தொடர்ந்து போலீசார் கண்காணித்து வந்தனர். செல்போன் சிக்னல் மூலம் மணலி மாத்தூர் ராகவன் தெருவில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று போலீசார் அங்கு விரைந்து சென்று சுற்றி வளைத்தனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் தயாராக இருப்பதை கண்டு அவர்களை கைது செய்து மதுரவாயல் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில்,கவாஸ்கர் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி.  அங்கு ரவுடிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் கடந்த சில மாதங்களாக சென்னையில் தங்கி உள்ளார். இங்கு முருகேசன்(43), செல்வம்(48), முத்து(என்ற) கோட்டைமுத்து(21), மணி (என்ற) மணிகண்டன் (24), உதயகுமார் (32), ஆகியோரை கூட்டு சேர்த்துக் கொண்டு பகல் மற்றும் இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்பவர்களை குறி வைத்து கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் சிறிய அளவில் திருட்டில் ஈடுபட்டால் வாழ்க்கையில் செட்டில் ஆக முடியாது என்பதால் பெரிய அளவில் கொள்ளை சம்பவத்தை நடத்த திட்டம் தீட்டி இருந்தனர்.  அதற்கு இந்த குழுவில் ஆக்டிங் கார் டிரைவராக இருந்து வந்த செல்வம், டிரைவர் வேலைக்கு செல்லும் இடத்தில் வசதியான வீட்டில் தனியாக வயதானவர்கள் இருப்பார்களா என்பதை நோட்டமிட்டுள்ளார். இதையடுத்து வில்லிவாக்கத்தில் வசதியான வீட்டில் வயதான தம்பதியினர் மட்டும் தனியாக இருந்துள்ளனர். அவர்களது மகன்கள் வெளிநாட்டில் உள்ளனர். எனவே இந்த வீட்டில் புகுந்து வயதான தம்பதியை கொலை செய்து விட்டு நகை, பணத்தை கொள்ளை அடிக்க திட்டம் தீட்டி உள்ளனர். என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் செல்வம் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கு நிலுவையில் இருப்பதும், இது தொடர்பாக அவர் சிறைக்கு சென்றுவிட்டு சமீபத்தில்தான் சிறையில் இருந்து வெளியே வந்து இருப்பது தெரியவந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 6  பேரிடமிருந்து பயங்கர ஆயுதங்கள், 14 சவரன் நகைகள், 1 கார், 1 பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களை அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • teacher_strike123

    சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!

  • indo_fire_dead

    இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி

  • hawai_volcano123

    ஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு!

  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

  • accidentkushinagar

    உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்