SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆர்.கே.பேட்டையில் குடும்ப தகராறில் மனைவி தூக்குபோட்டு தற்கொலை

2018-04-17@ 05:56:23

சென்னை: சென்னை வியசார்பாடி மல்லிபூ காலனியை சேர்ந்தவர் ரவிக்குமார் வயது(30). இவருக்கும் ஆர்.கே.பேட்டை செல்லாத்தூரைச் சேர்ந்த கந்தசாமி மகள் புவனா வயது (21) என்பவருக்கும் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஆர்.கே.பேட்டையில் வசித்து வருகின்றனர். ரவிக்குமார் பெயின்டராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு கவிதா வயது(3). என்ற மகளும் கார்த்தி வயது(2)என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை ரவிக்குமார் குடித்துவிட்டு குடிபோதையில் மனைவி புவனாவிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் புவனா மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகின்றது. இதையடுத்து திருத்தணி அரசு மருத்துவமனைக்கு போலீசார் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து ஆர்.டி.ஒ.ஜெயராமன் விசாரணை செய்து வருகிறார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • cmathleticstale

    மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை தடகள போட்டி : அமைச்சர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார்

  • tiruchurpooram

    கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா : கோலாகலமாக நடந்தது

  • saintjordysayspain

    செயிண்ட் ஜோர்டி தினம் : ஸ்பெயினில் ஒருவருக்கொருவர் புத்தகங்கள், மலர்கள் பரிசளித்து கொண்டாட்டம்

  • bookfairchennai

    உலகப் புத்தக தினத்தையொட்டி சென்னை கன்னிமரா நூலகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சி நிறைவு

  • 26-04-2018

    26-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்