SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

அண்ணா நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 1.5 கிலோ தங்கம், வைர நகை 2.5 லட்சம் துணிகர கொள்ளை

2018-04-17@ 05:55:50

சென்னை: அண்ணாநகர் பகுதியில் தொழில் அதிபர் வீட்டில் ஒன்றரை கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் நேற்றிரவு கொள்ளைபோன சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அண்ணாநகர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சுதர்சனராவ், குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று இருந்தார். நேற்று இரவு வீடு திரும்பிய அவரும் குடும்பத்தினரும், வீட்டின் கதவு உடைக்கபட்டு இருந்தது இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, வீடு அலங்கோலமாக கிடந்தது. வீட்டிலிருந்த பொருட்கள் வீடு முழுவதும் இறைக்கப்பட்டு இருந்தது. மேலும், பீரோவில் வைத்திருந்த ஒன்றரை கிலோ தங்க நகைகளும், 70 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளும், ரொக்கமாக வைத்திருந்த 2.5 லட்சமும் கொள்ளை அடிக்கப்பட்டதைக் கண்டு திடுக்கிட்டனர்.

அதனால் கடும் அதிர்ச்சி அடைந்த சுதர்சனராவ், அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் அளித்து புகார் செய்தார். அவரது  புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்து சென்ற கொள்ளையர்களை வலைவீசி தேசி வருகின்றனர். சம்பவம் பற்றி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களிலும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். தங்கம், வைரம் மற்றும் ரொக்கம் ஒட்டு மொத்தமாக கொள்ளைபோன சம்பவம் அண்ணா நகரில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்