SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேட்டரி கார்களுக்கு சார்ஜ் ஏற்றும் மையத்துக்கு உரிமம் கட்டாயமா? மின்சக்தி அமைச்சகம் விளக்கம்

2018-04-17@ 00:39:45

புதுடெல்லி: பேட்டரி கார்களுக்கு சார்ஜ் ஏற்றும் மையங்கள் அமைக்க மின்சார சட்டங்களின்படி உரிமம் பெற தேவையில்லை என மின்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வாகன எரிபொருள் தேவைக்கு 80 சதவீதம் இறக்குமதியை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் எரிபொருள் இறக்குமதி செலவு மட்டுமின்றி சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. இதை தவிர்க்கும் வகையில் மின்சாரத்தில் இயங்க்கூடிய பேட்டரி கார்களை உற்பத்தி செய்வதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இவற்றுக்கு சார்ஜ் செய்வதற்கான மையங்கள் தற்போது போதுமானதாக இல்லை. இவற்றை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இந்நிலையில், பேட்டரி கார்களுக்கு சார்ஜ் செய்யும் மையங்கள் அமைப்பதற்கு தனியாக உரிமம் பெறுவது கட்டாயமா என்பது தொடர்பாக மின்சக்தி அமைச்சக அதிகாரி அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது: வாகன சார்ஜ் செய்யும் மையங்களை அமைப்பதற்கு தற்போது உள்ள மின்சார சட்டம் 2003ல் மாற்றங்கள் எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில் இந்த மையங்களுக்கு அவசியமான தொழில்நுட்ப தேவைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.  மேற்கண்ட மையங்கள் மின் வாரியத்திடம் இருந்து மின் இணைப்பு பெற்று, அதில் இருந்து வாகனங்களுக்கு சார்ஜ் செய்கின்றன. இது மின்சாரத்தை விற்பதாக கருதப்பட மாட்டாது. பேட்டரியில் சார்ஜ் செய்யும்போது மின்சக்தி வேதியல் ஆற்றலாக மாறுகிறது. இதை மின்சாரத்தை விற்பதாக கருத வேண்டியதில்லை என்றனர். அதேநேரத்தில், தற்போது உள்ள மின்சார சட்டத்தில், மின் விநியோக நிறுவனங்கள் தவிர மற்றவர்கள் மின்சாரத்தை விற்பதற்கான அனுமதிகள் இல்லை. எனவே, பேட்டரி கார்களுக்கு சார்ஜ் செய்யும் மையங்களுக்கு மின்சார சட்டத்தில் தெளிவான வரையறைகளுடன் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2018

    24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • swati_hunger_strike

    போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

  • volvo_boat_comp

    பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

  • wildanimals_docto11

    காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

  • teachers_protest11

    டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்