SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகாத்மா காந்தி மண்டப நிதி திரட்டலின் நினைவாக தென்னாப்பிரிக்காவில் நடைபயணம்

2018-04-17@ 00:39:24

ஜோகனஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற காந்தி நடைபயணத்தில் அந்நாட்டு அதிபர் சிரில் ராமபோசா கலந்து கொண்டார். தென்னாப்பிரிக்காவில் நிறவெறி கொள்கைக்கு எதிராக மகாத்மா காந்தி போராட்டங்கள் நடத்தினார். ஜோகனஸ்பெர்க்கில் உள்ள மத்திய மண்டபத்தில்தான் இது தொடர்பாக ஆலோசனைகளை காந்தி நடத்துவார். அந்த இடத்தில் அவர் நினைவாக மண்டபம் கட்டுவதற்காக தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் முயற்சி மேற்கொண்டனர். இதற்காக, 33 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக ‘காந்தி நடைப்பயணம்’ என்ற பெயரில் நடைபயணத்தை நடத்தி நிதி திரட்டப்பட்டது. இந்த நிதியின் மூலம் ஜோகனஸ்ெபர்க்கில் பிரமாண்ட காந்தி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. தற்போது இங்குதான் தென்னாப்பிரிக்க இந்தியர்கள் நடத்தும் பெரும்பாலான கூட்டங்கள், விழாக்கள் நடக்கின்றன.

இந்நிலையில், 33ம் ஆண்டு காந்தி நடைபயணம் நேற்று நடந்தது. இதுவரை இல்லாத வகையில், இந்த நடைபயணத்தில் இந்தாண்டு தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா கலந்து கொண்டு நடந்தார். இந்த நடை பயணத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் பற்றி விழிப்புணர்வை  ஏற்படுத்துவதற்காக, பெரிய திருவிழாவைப் போல் இது நடைபெற்றது. நடை பயணத்தின் முடிவில் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில், இந்தியர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஈடுபட்டனர். இந்த நடைபயணத்தில் அதிபர் ராமபோசாவுடன், தென்னாப்பிரிக்காவுக்கான இந்திய தூதர் ருச்சிரா கம்போஜ். அமெரிக்க மனித உரிமை ஆர்வலர் ஜெசிகா ஜாக்சன், மகாத்மா காந்தியை போன்ற உருவ அமைப்பை கொண்ட ஹர்சவர்தன் பீதாம்பர், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு 12 கிமீ தூரம் நடந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்