SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

10 லட்சத்துக்கு மேல் எடுக்க இனி நேரிலும் விண்ணப்பிக்கலாம் : பிஎப் பணம் எடுக்க ஆன்லைன் கட்டாயம் கிடையாது

2018-04-17@ 00:39:04

புதுடெல்லி: பிஎப் பணத்தில் 10 லட்சத்துக்கு மேல் எடுக்க ஆன்லைனில்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நேரிலும் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி(இபிஎப்) நிறுவனம் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் காகிதம் இல்லா நிறுவனமாக மாறுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இபிஎப் அலுவலகம் ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பங்கள் பரிசீலிப்பதை தொடங்கி விட்டது. மேலும் ஆன்லைனில் நிறைய விண்ணப்பங்கள் வரத் துவங்கியுள்ளது. ஆன்லைன் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்று மூன்று தினங்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கில் நேரடியாக பிஎப் பணம் வரவு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 லட்சம் மற்றும் அதற்கு மேலான தொகைக்கான பிஎப் விண்ணப்பம் ஆன்லைனில் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்று இபிஎப் அலுவலகத்தின் தலைமை அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 1ம் தேதி முதல் காகித விண்ணப்ப படிவங்கள் சமர்ப்பிக்க வேண்டாம் என்று மண்டல அலுவலகங்கள் சுற்றறிக்கை அனுப்பின. அனைத்து உறுப்பினர்களும் ஆன்லைன் விண்ணப்பம் செய்ய ஏதுவாக யூஏஎன் நம்பரை ஆதார் மற்றும் வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு பிஎப் நிறுவனம் அறிவுறுத்தியது. இந்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதமே வெளியிட்டது. இதன்படி தொழிலாளர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பித்து வருகின்றனர்.  இந்நிலையில், நேரிலும் விண்ணப்பம் சமர்ப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மண்டல பிஎப் அலுவலகங்கள் மற்றும் கள அலுவலகங்களுக்கு கடந்த 13ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதில் கூறியிருப்பதாவது: 10 லட்சத்துக்கு மேல் பிஎப் பணத்தை எடுக்க நேரிலும் விண்ணப்பத்தை பெற்று பரிசீலனை செய்து செட்டில்மென்ட் அளிக்கலாம். இதுபோல் 5 லட்சத்துக்கு மேல் பணம் எடுக்கவும் நேரில் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நடைமுறையை ஏற்றுக்கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும், உறுப்பினர்கள், சர்வதேச பணியாளர்கள் என பலர் ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது சில சிக்கல்களை சந்தித்துள்ளனர். இதுதொடர்பாக வந்த கோரிக்கைகள் மற்றும் புகார்களை பரிசீலனை செய்து, மத்திய பிஎப் ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2018

    24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • swati_hunger_strike

    போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

  • volvo_boat_comp

    பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

  • wildanimals_docto11

    காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

  • teachers_protest11

    டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்