SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவுடன் நேர்வழியில் நல்லுறவு : சீனா புதிய முடிவு

2018-04-17@ 00:31:45

பீஜிங்: ‘இந்தியாவுடன் நேர்வழியில் இருதரப்பு உறவை மேம்படுத்த சீனா விரும்கிறது’ என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது சிக்கிம் மாநில எல்லையான டோக்லாமில் சீன ராணுவம் சாலை அமைக்க கடந்தாண்டு முயற்சி செய்ததை இந்திய ராணுவம் தடுத்தது. இதனால், இருதரப்புக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.

இருநாடுகளும் தூதரக அளவில் எடுத்த முயற்சியால், இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த பதற்றம் தணிந்தது. அதன் பிறகும், எல்லை பிரச்னைகளில் அடிக்கடி சிறுசிறு உரசல்கள் ஏற்பட்ட போதிலும், இருதரப்பு உறவை பலப்படுத்த இருநாடுகளும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

கடந்த 13ம் தேதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீனா சென்று, அந்நாட்டு வெளியுறவு விவகாரத்துறை ஆணையர் யாங் ஜீச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையே 11வது கூட்டு பொருளாதார குழு கூட்டமும் நடைபெற்றது. இதில், இருநாட்டு பொருளாதார விவகாரங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

சீனா உடனான உறவை மேலும் பலப்படுத்தும் வகையில், இம்மாதம் 24ம் தேதி சீனாவில் நடைபெறும் ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு’ மாநாட்டில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்து கொள்கின்றனர். சீனாவின் குயிங்டோ நகரில் ஜூனில் நடக்கும் இந்த அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் ஹுவா சன்யிங் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவுடன் நேர்வழியில் இருதரப்பு உறவை வைத்துக் கொள்ள சீனா விரும்புகிறது. இருநாடுகளுக்கும் இடையே பலமான உறவை வளர்ப்பதற்காக, புதிய ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான துறைகள் பற்றி ஆராயப்படும். இதன் மூலம், சீன அதிபர் ஜி ஜிங்பிங், பிரதமர் மோடி ஆகியோரின் வழிக்காட்டுதல்படி இந்தாண்டு இருநாட்டு உறவில் புதிய முன்னேற்றம் ஏற்படும்’’ என்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • france_park_machine

    பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

  • madurai_meenut11

    மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

  • berlin_bomb_war

    இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

  • 10schooldata

    10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்