SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஆந்திராவில் பந்த்: கோயம்பேட்டில் இருந்து பஸ்கள் இயக்கப்படவில்லை

2018-04-17@ 00:26:50

சென்னை: சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஆந்திராவில் முழு அடைப்பு நடைபெறுவதால் சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆந்திராவுக்கு நேற்று பஸ்கள் இயக்கப்படவில்லை. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு தினமும் 186 ஆந்திர அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. அந்தவகையில் திருமலா, ஐதராபாத், விசாகப்பட்டினம், அனந்தபள்ளி, கடப்பா, கர்னூல், காளஹஸ்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி நேற்று அனைத்து எதிர் கட்சிகள் சார்பில் அங்கு முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

இதன் காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா செல்லும் 60க்கும் மேற்பட்ட பேருந்துகள்  நேற்று காலையில் ஆந்திராவுக்கு இயக்கப்படாமல் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று பகல் முழுவதும் ஆந்திராவுக்கு ஒரு பஸ் கூட இயக்கப்படவில்லை. இதனால், சென்னையில் இருந்து ஆந்திரா செல்ல வந்திருந்த பயணிகளும் வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பலர், மாற்று வழியாக ரயில்களில் சென்றனர். அதேபோல ஆந்திராவில் இருந்தும் சென்னை கோயம்பேட்டுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2018

    24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்