SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாத்தனூர் அணையில் பரபரப்பு : சுற்றுலா பயணிகளை விரட்டிவிரட்டி கொட்டிய தேனீக்கள்

2018-04-17@ 00:25:25

தண்டராம்பட்டு: சாத்தனூர் அணைக்கு சுற்றுலா வந்த பயணிகளை தேனீக்கள் விரட்டிவிரட்டி கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அணைக்கு  விடுமுறை மற்றும் திருவிழா காலங்களில் கூட்டம் அலைமோதும். திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து சுற்றிப் பார்ப்பது வழக்கம். இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று முன்தினம் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் சாத்தனூர் அணைப் பகுதியில் குவிந்தனர். அப்போது, நீச்சல் குளம் அருகே உள்ள அரச மர நிழலில் சிலர் அமர்ந்திருந்தனர். மேலும், சிலர் விறகு அடுப்பில் அங்கேயே உணவு சமைத்து கொண்டிருந்தனர். அப்போது, வெளியேறிய புகை காரணமாக, அந்த மரத்தில் கூடு கட்டி இருந்து தேனீக்கள் வெளியேறி சுற்றுலாப் பயணிகளை சரமாரியாக கொட்ட ஆரம்பித்தன.

தப்பி ஓட முயன்றவர்களை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டியதில் 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், அணைப்பகுதியில் சுமார் 13 தேன்கூடுகள் காணப்படுகிறது. இவற்றை அகற்ற வேண்டும்’’ என்றனர். அணைக்கட்டு பகுதியில் உள்ள காந்திமண்டபத்திலிருந்து 9 கண் மதகு பகுதியில் தேன்கூடுகள் காணப்படுவதால் அவ்வழியாக சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicovalcano

    மெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்

  • modipuja

    உத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு

  • animalsmuggling

    இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

  • swimminggeneva

    ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

  • Cairoegyptopen

    மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்