SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தமிழகம் முழுவதும் 44 டோல்கேட்களில் 88 ஆவின் ஹைவே நெஸ்ட் மினி ஸ்டால் அமைக்கப்படும்

2018-04-17@ 00:24:21

வேலூர்: தமிழகம் முழுவதும் 44 டோல்கேட்களில் 88 ஆவின் ஹைவே நெஸ்ட் மினி ஸ்டால் அமைக்கப்படும் என்று ஆவின் உயரதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் தினமும் 29.32 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. மாநிலத்தில் உள்ள 12,105 பால் உற்பத்தியாளர் சங்கத்தில் 23.01 லட்சம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆவின் மூலம் பால், நெய், கோவா, லஸ்ஸி, ஐஸ்கிரீம், சாக்லேட் உட்பட பால்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக தமிழகத்தில் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் பாலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆவின் பால் பொருட்கள் விற்பனையை மேலும் அதிகரிப்பதற்காக, தமிழகம் முழுவதும் 44 டோல்கேட்களில் இருபுறங்களிலுமாக 88 இடங்களில் ஆவின் ஹைவே நெஸ்ட் மினி ஸ்டால்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. இதுகுறித்து ஆவின் உயரதிகாரிகள் கூறுகையில், ‘இந்த ஹைவே நெஸ்ட் மினி ஸ்டாலுக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அவர்கள் டோல்கேட்களின் இருபுறங்களிலும் உயர்தர ஸ்டால் அமைத்து கொடுப்பார்கள். அதில் ஆவின் சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு ஆவின் பால், ஐஸ்கிரீம், பால்கோவா உட்பட அனைத்து வகையான பொருட்களும் விற்பனை செய்யப்படும். 24 மணி நேரமும் இயங்கும் வகையில் விரைவில் தொடங்கப்பட உள்ளது’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2018

    24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்