SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி : மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலை மீண்டும் செயல்படத்தொடங்கியது

2018-04-17@ 00:23:49

குளச்சல்: மத்திய சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளதால் மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலை மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது.
குமரி மாவட்ட கடற்கரை மணலில் அரிய வகை தாதுக்கள் இருப்பது கண்டறியப்பட்டதால் ஆங்கிலேயேர் காலத்திலேயே மணவாளக்குறிச்சியில் தாது மணல் ஆலை தொடங்கப்பட்டது. 1966ல் மத்திய அரசிடம் இந்த ஆலை ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு இந்திய அரிய மணல் ஆலை என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை மூலம் இந்தியாவிற்கு அந்நியச்செலாவணி அதிகளவில் கிடைக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தனியார் மணல் ஆலைகள் தாது மணல்களை பிரித்து எடுக்கும் பணியில் ஈடுப்பட்டதால் இங்கு மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு இல்லாமல் மணல் எடுப்பதை தடுக்க திட்டமிட்ட மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற்றுதான் மணல் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனால் தனியார் நிறுவனங்கள் மணல் எடுக்கவில்லை. அரசு மணல் ஆலைக்கும் மணல் எடுக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும் என்பதால் இங்கும் மணல் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. மத்திய அரசின் அனுமதி இல்லாததால் மணல் போக்குவரத்திற்கு மாநில அரசும் தடை விதித்தது. இதனால் இருப்பில் உள்ள தாது மணலை விற்பனை செய்ய முடியாமலும் ஆலை நிர்வாகம் தவித்து வந்தது. ேமலும் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மணல் ஆலை செயல்படாமல் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டது. இரு தினங்களுக்கு முன் அனுமதி கிடைத்துள்ளன. இதனால் மணல் ஆலை மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. மணல் ஆலையை நேற்று தொடங்கி வைத்து விஜயகுமார் எம்பி பேசியதாவது: மணல் ஆலைக்கான சுற்றுச்சூழல் அனுமதி வேண்டி கடந்த 2011ல் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் இது கிடப்பில் போடப்பட்டதால் மாநில அரசின் மணல் போக்குவரத்து அனுமதியையும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டேன். தற்போது ஆலை மீண்டும் இயங்க தொடங்கியதில் மிக்க மகிழ்ச்சி. ஆலைக்கு மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் மணல் எடுக்க பொதுமக்கள் தங்கள் நிலங்களை வழங்க முன்வந்துள்ளனர். மேலும் இந்த ஆலை 110 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதை நினைவுகூறும் வகையில், என் எம்பி தொகுதி நிதியில் இருந்து அலங்கார வளைவு அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்