SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கப்பலூர் டோல்கேட்டில் ஜூன் 13 வரை பாதி கட்டணம் : ஐகோர்ட் கிளை உத்தரவு

2018-04-17@ 00:23:06

மதுரை: கப்பலூர் டோல்கேட்டில் ஜூன் 13 வரை பாதி கட்டணம் வசூலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  விருதுநகரை சேர்ந்த மணிமாறன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘சாலை வசதி மற்றும் பராமரிப்பில்லாத நிலையில் கப்பலூர் டோல்கேட்டில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முறையான வசதிகள் இல்லாத டோல்கேட் கட்டணம் வசூலிப்பது தவறு. எனவே, கப்பலூர் டோல்கேட்டிற்கு உட்பட்ட இந்த சாலையை சீரமைக்கவும்,  அதுவரை வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும்,’’ என்று கூறியிருந்தார்.
மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், ‘‘போக்குவரத்திற்கு உகந்த சாலையாக அமைக்கப்படும் வரை, கப்பலூர் டோல்கேட்டில் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தில் பாதி மட்டுமே வசூலிக்க வேண்டும்,’’ என உத்தரவிட்டிருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பசீர்அகமது ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வக்கீல் கமிஷனர் குழு சார்பில், ‘பாதி கட்டணம் வசூலிக்க வேண்டுமென ஜனவரி 25ல் ஐகோர்ட் உத்தரவிட்டது. அதிலிருந்து மார்ச் 31 வரை நிர்ணயம் செய்யப்பட்டதில் பாதி கட்டணம் வசூலித்துள்ளனர். ஏப்ரல் 1 முதல் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உயர்த்தப்பட்ட கட்டணத்தில் இருந்து பாதி கட்டணம் வசூலிக்கப்படுகிறது’ என கூறப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை ஜூன் 13க்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அதுவரையில் கப்பலூர் டோல்கேட்டில் பாதி கட்டணம் மட்டுமே வசூலிக்க உத்தரவிட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்