SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தொடர் மழை காரணமாக குன்னூர் அருகே திடீர் மண் சரிவு

2018-04-17@ 00:21:39

குன்னூர்: தொடர் மழை காரணமாக குன்னூர் அருகே மண் சரிவு ஏற்பட்டதில் 23 வீடுகள் சேதமடைந்தன. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரபகுதியில் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு மிதமான மழை பெய்தது. தொடர் மழையால் நிலத்தின் ஈரத்தன்மை அதிகரித்து பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து லேசான மண் சரிவு ஏற்பட்டது. குன்னூர் அருகே கொலக்கம்பை செல்லும் சாலையில் சட்டன் விதைக்காடு அருகே சாலையோரம் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும், பல பகுதிகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில வீடுகளின் தடுப்பு சுவர்கள் சரிந்து விழுந்தன. தொடர் மழையால் குன்னூரில் 23 வீடுகள் சேதமடைந்ததுடன், ஏற்கனவே பழுது பார்க்கப்பட்ட சாலைகளும் பெயர்ந்துள்ளது. மழை காரணமாக, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை பாதையில் புதிய நீரூற்றுகளும் உருவாகியுள்ளன.  கனமழை பெய்தால், மண் சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வருவாய் துறை, மின்வாரிய துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கனமழை நீடித்தால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2018

    24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்