SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முயல் வேட்டை திருவிழா கிராமங்களில் கோலாகலம்

2018-04-16@ 21:07:24

பெரம்பலுார்: ஆண்டுதோறும் சித்திரை முதல் ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூர் மாவட்டம் புதுநடுவலூர், எசனை, குரும்பலுார், லாடபுரம், துறைமங்கலம், கோனேரிபாளையம், பாடாலுார், விஜயகோபாலபுரம், கூத்தனுார், நக்கசேலம், சிறுவயலுார், டி.களத்துார், கள்ளப்பட்டி, பெரியம்மாபாளையம், தொண்டாமாந்துறை, அரசலுார், அன்னமங்கலம் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், முயல் வேட்டை திருவிழா நடைபெறும்.
நேற்று சித்திரை முதல் ஞாயிறு என்பதால் இக்கிராமங்களில் முயல்வேட்டை திருவிழா நடந்தது.வீட்டுக்கு ஒருவர் வீதம், கிராமங்களில், முயல் வேட்டைக்கு செல்வதற்காக, அந்தந்த கிராமத்தின் மாரியம்மன் கோயில்கள் முன் காலை 7 மணியளவில் ஆண்கள் மட்டும் கூடினர்.

அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பூசாரிக்கு அருள்வந்து சாமியாடினார். வேட்டைக்கு செல்லும் திசை மற்றும் வேட்டையின்போது, கிடைக்கும் முயல்களின் எண்ணிக்கை  குறித்து அப்போது அவர் குறி சொன்னார். சிறுவர்கள், வாலிபர்கள், பெரியவர்கள் என 50க்கும்மேற்பட்டோர், குத்தீட்டி, உருட்டுக்கட்டை, வேட்டை நாய் ஆகியவற்றுடன் முயல்வேட்டைக்கு கிளம்பினர். மாலை 4 மணி வரை முயல்வேட்டையில் ஈடுபட்டு, வேட்டையாடிய முயல்களுடன் குறிப்பிட்ட பகுதியில் மாலையில் கூடினர்.

பின்னர் வேட்டையாடிய முயல்களை குச்சிகளில் தோரணம் போல் தொங்கவிட்டு, மேளதாளங்களுடன் ஆடிப்பாடி ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். வேட்டையில் கிடைத்த முயல்கள் மற்றும் ஆடு ஆகியவை சாமிக்கு பலி கொடுக்கப்பட்டு படையல் செய்யப்பட்டது. முயல் மற்றும் ஆட்டுக் கறி பங்கு பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

  • londonprotest

    பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

  • 25-03-2019

    25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்